பக்கம்:சகல கலாவல்லி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魯魯 முலே இல் வல்லி

இரண்டு மேகம் ஆகிறது. மேகம் உப்பைக் குறைத்துப் பேய்கிறது என்றும் சொல்வதுண்டு. தடிந்து எழிலி தான் நல்கா தாகி விடின்' என்று குறளில் வருகிறது.

அப்படி மழை பெய்ய இருக்கும் மேகத்தைக் கண்டு , மயில் ஆடுகிறது.

சகல கலா வல்லியாகிய மயில் எப்படி ஆடுகிறது ? இந்த உலகம் மிக விரிந்திருக்கிறது, சரப் பொருள்களும் அசரப் பொருள்களும் நிரம்பியது உலகம்; உயிர்ப் பொருள் களும் உயிரில் பொருள்களுமாகக் கொண்டு பரந்திருக்கிறது. இந்த உலகத்தை நாம் பார்க்கிருேம். கண்ணிலே கண்ட வற்றை அப்படி அப்படியே பார்க்கிருேம்.

புலவர்களும் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கிரு.ர்கள். அவர்கள் பார்க்கும் பார்வைக்கும் நாம் பார்க்கும் பார்வைக்

கும் வேறுபாடு உண்டு.

ஒரு மலர்ச் செடியில் உள்ள மலரை ஒரு குழந்தை பறிக் கிறது. அதைப் பறித்துப் பிய்த்துவிடுகிறது. ஒரு காதலன் பார்த்தால் அதைக் கொய்து தன் காதலிக்குச் சூட்டுகிருன். குழந்தை ஒரு கணம் அதன் அழகைப் பார்த்து அதைக் குலத்து விடுகிறது. காதலனும் அதன் அழகைப் பார்க் கிருன்; ஆனல் அதைப் பறித்துத் தன் காதலிக்குச் சூட்டி அழகு செய்கிருன். பக்தனே மலரின் அழகைப் பார்க்கிருன், பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிருன்.

குழந்தை, மலரின் அழகை நன்ருக அநுபவிப்பதில்லை. காதலனும் பக்தனும் அந்த மலரின் அழகைக் கண்டு அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிரு.ர்கள்: மலரைக் கொண்டு வேறு ஒரு செயலைச் செய்கிரு.ர்கள்.

ஒரு கவிஞன் அந்த மலரைப் பார்க்கிருன்; அதன் அழகில் ஈடுபட்டு அதைப் பார்த்துக் கொண்டே யிருப்பான். அதைப் பறிக்க மாட்டான். அதன் நிலையில் அது இருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/31&oldid=557862" இலிருந்து மீள்விக்கப்பட்டது