பக்கம்:சகல கலாவல்லி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி மழை 鱷劉

கிருேம். உன்னும் பொருள் சுவையாக இருந்தால் அமிர்தம் என்கிருேம்; அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்" என்று பாடினர் ஒனவையார். 'கானமுதம்' என்று காதுக்கு இனிமை தருவதற்கும் அமுதத்தை உவமையாக்குகிருேம். காட்சிக்கினிய கடவுளே, ஆராவமுதன்’ என்று போற்று கிருேம். இவை யாவும் இன்பத்தைத் தருவதை எண்ணி வந்த உவமைகள்:

இதற்கு மேலும் கவிதைக்கும் அமுதத்துக்குமிடையே ஒரு பொதுமை இருக்கிறது.

'அமுதாக நிறைந்த கவிதையிலே உயர்நாடு' என்று பாரதியார் பாடுகிரு.ர்.

அம்ருதம் என்ற வடமொழிச் சொல்லே அமிர்தம், அமிழ்து, அமுதம், அமுது என்று பல வேறு வடிவங்களே எடுத்தது. அந்தச் சொல்லுக்குச் சாவை நீக்குவது என்று பொருள். அமிழ்தம் தன்ளுேடு கலந்தவர்களைச் சாவாமல் இருக்கச் செய்யும்.

நல்ல கவிதையும் அப்படித்தான். 'என்றும் கிழியா தென் பாட்டு' என்று ஒளவையாரும், 'மாயா மற்றிவர் செய்யும் உடம்பு' என்று குமரகுருபரரும் பாடுவார்கள். மாயாக் கவிதையில் உள்ள பொருளும் மாய்வதில்.ை கம்பன் கவிதையில் இடம் பெற்றதனுல் இராமன் என்ற்ம் அழகு குன்ருமல் இருக்கிருன் என்பது பெரிதன்று. இராவணனும் மாயாமல் தன் உருவைக் காட்டிக் கொண்டு நிற்கிருன். உண்மையான இராவணனை நாம் விரும்ப மாட்டோம். ஆளுல் காப்பியத்தில் வரும் இராவணனே நாம் பலகாலும் கண்டு இன்புறுவோம். தேனில் ஊறிய நெல்லிக்காய் துவர்ப்பு மாறி இனிய சுவை கொள்வதுபோல, கவிதையென்னும் அமிழ்தில் ஊறிய பாத்திரங்களும் கருத்துக்களும் சாவாமல் என்றும் நிலவுகின்றன. இந்த வகையிலும் செழுத்தமிழ், தெள்ளமுதை ஒத்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/36&oldid=557867" இலிருந்து மீள்விக்கப்பட்டது