பக்கம்:சகல கலாவல்லி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ச்கல் கலாவல்லி -

அரிது; ஒருகாலமும் சிதையாமல் இருக்கும்படியான கல்விச் செல்வத்தைப் போன்ற பேறு வேறு இல்லை. .

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு;

மாடல்ல மற்றை யவை'

என்று திருவள்ளுவர் ஆணித்தரமாகச் சொல்கிரு.ர். செல் வத்தை நிலையாதது என்று வெறுப்பவரிகள் முனிவர்கள். ஆனல் கல்விச் செல்வத்தையும் ஞானத்தையும் விரும்பு வார்கள். தாம் ஈட்டிய பொருளையெல்லாம் ஒருங்கே துறந்த பட்டினத்துப்பிள்ளையார் கல்விச் செல்வத்தைப் பெற்றிருந்தார்: கவி சொல்ல வல்ல நல்வித்தையையும் பெற்றிருந்தார். கலைமகள் இந்தப் பேற்றைத் தருகிறவன். இதைச் சொல்கிருர் குமரகுருபரர்,

நளிளுசனம்சேர் செல்விக்கு அரிது என்று, ஒரு காலமும்

சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வம் பேறே,

சகல கலாவல்லியே :

என்று கலைமகளையும் திருமகனேயும் ஒப்பு நோக்கிக் கல் மகளின் சிறப்ப்ைப் புலப்படுத்துகிரு.ர். கல்வியே பெருஞ் செல்வம்: அதைப் பெறுவது பெரிய ப்ேறு. அந்தப் பெரும் பேருக எழுந்தருளியிருப்பவன் சகல கலாவல்வி. அந்தச் செல்வத்தை உடையவளிடம், அழியும் செல்வத்தையா கேட்பது ? வற்ருத கல்விச்செல்வப் பேருக இருக்கும் அன்னே யைப் பார்த்து, அந்தக் கல்வியின் விளைவுகளாகிய வாக்கு வன்மை அவதானத் திறமை, கவித்துவம் என்னும் மூன்றையும் வேண்டுகிருர். . .

சொல்விற் பணமும் அவதான

மும்கவி சொல்லவல்ல நல்வித்தை யும்தந்து அடிமைகொள்

வாய், தனி ஞ்சனம்சேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/75&oldid=557906" இலிருந்து மீள்விக்கப்பட்டது