பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 107

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்

கையில் ஊமன் கண்ணில் காக்கும்

வெண்ணெய் உணங்கல் காக்கும்

பரந்தன்று இந்நோய் -குறு. 58/3-6

1.3.3. இரவுப்பொழுது பாழும் கிணற்றில் விழுந்த பசுவின் கன்றைக் கண்ட உயர்திணை ஊமன் அத்துன்பச் செய்தியைப் பலருக்கும் சொல்ல முடியாமல் வேதனைப்படும் நிலை உவமையாக அமைக்கப்படுகிறது.

...கூவற் குரால் ஆன்படுதுயர் இரவில் கண்ட உயர்திணை ஊமன் போலத் துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே

-குறு. 224/3-6

1.3.4. குருடன் ஒருவன் தூங்குகின்ற புலியின் மீது தெரியாமல் இடறி விழுந்தால் அவன் நிலைமை அழிவுக்குக் காரணமாக அமைதல், பகை அரசனின் வீரம் தெரிந்து கொள்ளாமல் பகைமையை மேற்கொள்ளுதலுக்கு உவமை கூறப்படுகிறது.

உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே. -புறம்.73/-68

'தூங்குகின்ற புலியைத் தட்டி எழுப்புதல் போல’ என்ற பழமொழி இக்காலத்தில் வழங்குகின்றது. இப்பழமொழியோடு இப் புறப்பாடல் ஒத்து விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

1.3.5. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல்' என்ற பழமொழியும் இக்காலத்தில் வழங்குகிறது. இதற்குக் கீழ்வரும் குறந்தொகைப்பாட்டு அமைத்துத் தரும் உவமையும் காரணமாக இருக்கலாமோ என்று ஐயுறத் தக்க அளவில் உவமை அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியும் நடை பெறும் சாதாரண பொது நிகழ்ச்சி அன்று; நடவாது என்றும் கூற இயலாது.

பெரிய மலையில் பெருந்தேனைக் காணும் முடவனோ இரண்டு கால்களும் இழந்தவனாய் இருக்கின்றான். அவன் தன் உள்ளங்கையில் இருந்த சிறு குடையால் எட்டிப்பிடித்து