பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 119

சென்று பிச்சை ஏற்கும் யானைக்கு அப்பாணனின் நிலை உவமிக்கப்படுகிறது.

பிச்சை சூழ் பெருங்களிறு போல எம் அட்டில் ஒலை தொட்டனை நின்மே. நற். 300/11-12.

1.8.3. வண்டு நாவற்பழத்தைத் தன் இனம் எனக் கருதி மொய்க்கின்றது. அவ்வண்டினை நாவற்பழம் என நண்டு ஒன்று கருதி அதனைக் கவ்வுகின்றது. வண்டு இடும் ஒலம் கேட்டு நாரை நண்டினைப் பிடிக்க அது பிடியைத் தளர்த்தி விடுகின்றது. இவ்வாறு ஒன்றை ஒன்று தவறாக உணரும் செய்திகளில் உவமையும் நகைச்சுவையும் ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு செல்கின்றன.

புன்கால் நாரை பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழம்செத்துப் பல்கால் அலவன் கொண்ட கோட்கூர்ந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரைதேர் நாரை எய்திய விடுக்கும். -நற். 35/1-6.

1.8.4. அரசனிடமிருந்து பெற்று வந்த பரிசில் பொருள் களில் உயர்ந்த அணிகலன்களைப் புலவர் தம் சுற்றத்தனரிடம் தர அவர்கள் அவற்றை அணிந்துகொள்ளத் தெரியாமல் மாற்றி அணிந்துகொள்கின்றனர். இக்காட்சி இராமாயணத்தில் வரும் நகைச்சுவை பொருந்திய காட்சிக்கு உவமிக்கப்படுகிறது. சீதையின் அணிகலன்களை வழியில் கண்டேடுத்த குரங்குகள் அவற்றை அணிந்துகொள்ளத் தெரியாமல் மாற்றி அணிந்து கொண்டன. இந் நகைச்சுவை பொருந்திய காட்சி உவமையில் இடம்பெற்று அதற்கு ஏற்ற வகையில் மற்றொரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் பொருளாகப் பெற்றுள்ளது.

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வவ்விய ஞான்றை நிலஞசேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தா அங்கு

-புறம். 378/18-21.

1.8.5. புலியோடு பொருத யானை அதே நினைவில் உறங்குகிறது. புலி தன்னைத் தாக்க வருவதுபோலக் கனவு காண்கின்றது உடனே விழித்தெழுந்து அருகிலிருக்கும்