பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 123 சிறப்புப் பெற்றுள்ளது. நெய்தல், குளத்தில் இருந்து காட்சி அளிக்கும் மலராகும். அதற்கு ஏற்பக் கயம் மூழ்கு மகளிரின் கண்கள் உவமிக்கப்பட்டுள்ளன. இதுவே இவ் உவமையின் தனிச் சிறப்பு எனலாம்.

கணைக்கால் நெய்தல் இனமீன் இருங்கழி ஒதம் மல்குதொறும் கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்.

-குறு. 9/4-6.

1.9.6. கல்பொரு சிறு நுரையார்: தலைவி தன் காதலனைக் காணாவிட்டால் மிக்க தனிமையால் வரும் துன்பத்தால் கல்பொறு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லாமல் மறைந்துவிட நேரிடும் என்று கூறுவதாக அமைந்த கூற்றில் இவ் உவமை அமைந்துள்ளது. இத்தனிக்காட்சி அப்புலவர்க்கே உரிய சிறப்பு ஆகும், எங்கோ எப்பொழுதோ பார்த்த கல்லில் மோதுகின்ற சிறுநுரை இல்லாமல் போகிய இக்காட்சி அவர் நினைவில் நின்று தலைவியின் உள்ளத்திற்கு உவமையாக நின்றது.

யாம்எம் காதலர்க் காணேம் ஆயின்

செறிதுணி பெருகிய பெருநீர்க்

கல்பொரு சிறுநுறை போல

மெல்ல மெல்ல இல்லா குதும்மே. -குறு.209/3-6.

1.9.7. கவை மகனார்: தோழி ஒருத்தி தலைவனை நோக்கி அவன் நயம் உடைமையால் தலைவியிடம் வருகின்றான் என்றும், தலைவி தன் மடமை காரணமாக மகிழ்கின்றாள் என்றும், இவற்றிற்கு இடையில் தான் கவை மகவு நஞ்சு உண்டதைப்போல மனவேதனை பெறுவதாகவும் கூறு கின்றாள். தோழியின் மனவேதனைக்கு கவை மகவு நஞ் சுண்ணும் செய்தி உவமையாக அமைகின்றது. அச்செய்தி மிக அரிய செய்தியாக அமைந்துள்ளது.

...நீ நின்

நயனுடை மையின் வருதி இவள்தன்

மடனுடைமையின் உவக்கும்யான் அது

கவைமக நஞ்சுஉண்டாஅங்கு

அஞ்சுவல் பெருமஎன் நெஞ்சத் தானே.

- குறு.324/3-7.