பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 138

மகளிர் கூந்தல். முதலிய கரிய பொருள்களுக்கும் உவமை யாயின. அவற்றுள் இருள், மகளிர் கூந்தலுக்கு உவமையாகிய பெருகிய வழக்காகும். நிலவும், மணலுக்கு உவமையாகியது பெரு வழக்காகும். நிலவும் இருளும் இணைப்படுத்தி வலை உணங்கும் மண்ற்பரப்புக்கும்: கடலும் சோலையும் சேர்ந்த காட்டுக்கும்’ உவமைப்படுத்தியிருப்பது தனி அழகைத் தருகிறது. மதி முன்னால் கெடும் இருள் தெவ்வர் ஆக்கத்திற்கு 9_6)J6RT)Lf) ஆகியது."

1.1.2.12. கடல் பல்வகைப் பொருள்களுக்குப் பரப்பாலும் ஒசையாலும் உவமையாகியது குறிப்பிடத் தக்க செய்தியாகும். அவற்றுள் கடல் படைப் பரப்பிற்கும், அது மிகுதியாக எழுப்பிய கிளர்ச்சி மிக்க ஆரவார ஒலிக்கும் உவமிக்கப்பட்டது பல்கிய வழக்காகும். வான் மழையில் கொடையைக் கண்டது போலக் கடல் பரப்பிலும் ஒலியிலும் வீரர்களின் ஆரவாரத்தினைக் கண்டது அக்கால மக்கள் வாழ்வியலோடு கண்ட செய்தியாகும்." மற்றும் காதல்." காமம்’ நட்பு" ஆகிய நுண் பொருட்கும் கடல் உவமையாகியது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

1.1.2.13. கயத்தை வளம் மிக்க வீடுகளுக்கு உவமைப் படுத்தியது ஒரு மரபாக விளங்கியது. வளமிக்க வீட்டினை நகர் என்ற சொல்லால் குறிப்பிட்டனர்."

1.1.2.14. மேகம் கொடையாகிய பண்புக்கு உவமிக்கப் பட்டது பெருகிய வழக்கு. அதே போல மகளிர் శిఖతల్స్ வானில் விளங்கிய கரிய மேகங்கள் உவமை ஆயின." கார் என்னும் சொல்லுக்கும் கருமை என்ற சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது பற்றி மேகம் கார் எனவும் கூறப்பட்டது.

1. பத். 10/255 2. நற். 26/9; 270/3; 284/1; கலி. 49/8; 122/12; 140/33; பதி. 18/4;

அகம். 92/13ட 185/4. 3. பத். 9/82-83, 87. 4. குறு. 81/5-6. 5. பத். 6/195-196, 6. பதி. 69/3; 90/31 அகம். 138/6204/2:215/5; புறம். 37/36-37;

42/3,96/14; 197/3:322/9; 351/4; 377/29; பத். 1/103; 6|180. 7. நற். 166/10. 8. அகம். 128/3-4. 9. ஐங். 184/4. 10. அகம். 105/5-7; புறம், 70/6-7; பத். 6/484,