பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சங்க இலக்கியத்தில் உவமைகள்

அர். காவிரிப்படப்பை: குடவாயில்’ விளங்கில்," குட நாடு’ Ꮬ ഥസ്' பொதியில்." பவத்திரி" எவ்வி நீழல், 1 வஞ்சி" தழும்பன் ஊர், வாகை." நன்னன் பறம்பு. ஆகிய பல ஊர்கள் மகளிர் நலத்துக்கு உவமை யாயின.

1.2.3. இவ்வூர்கள் மகளிருக்கு மட்டுமல்லாமல் சிறந்த ஆடவர்க்கும் உவமையாகக் கூறப்பட்டன என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்." இஃது அருகிய வழக்காகும்.

1.2.4. காதல், கடமை என்னும் இருபெரு உணர்வு களுக்கும் இடையே உள்ள போராட்டம் அமைக்கும் சித்திரங் கள் பல தீட்டப்படுகின்றன. வளமிக்க ஊர்களும், அவ்வூர்களில் கிடைக்கும் நிதிகளும் கிடைத்தாலும் தலைவியின் அன்புக்கு அவை ஈடு ஆகா என்னும் கருத்து வற்புறுத்தப்படுகிறது. இவ்வாறு வற்புறுத்திக் கூறப்படுதல் அக்கால இலக்கிய மரபு என்பது தெரிகிறது. பட்டினப்பாலை என்னும் முழுப்பாட்டே இவ் விலக்கிய மரபினை அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது.

முட்டாச்சிறப்பில் பட்டினம் பெறினும்

வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய

வாரேன் வாழிய நெஞ்சே. பத். 9/218-220

இது பட்டினப்பாலையில் மட்டும் அமைந்த தனிச் செய்தி யாகாது. ஏனைய இடங்களிலும் இக்கருத்து வற்புறுத்தப் பட்டுள்ளது என்பது ஆய்வால் வெளிப்படுகிறது. ஊர்களும் ஊரில் கிடைக்கும் நிதியமும் தலைவியை நோக்கத் தலை வனுக்குத் தாழ்ந்து விடுகின்றன. நிதிகளைப் பற்றிய கற்பனை கள் அக்காலத்தில் பல்கிப் பரவி இருந்தன. அத்தகைய நிதிகள் கிடைப்பதாக இருந்தாலும் தலைவியை விட்டுப் பிரிய

1. ஐங். 61; 3-4; அகம். 6, 20-21. 2. பதி. 90; 46-50 3. அகம் 44-18 4. அகம் 81; 13-14. 5. அகம் 91; 12-18; 115; 5-6. 6. அகம் 249; 8-10. 7. அகம் 270; 8-10. 8. அகம் 322; 14-15, 9. அகம் 326; 5-7. 10. அகம் 340, 6-8. 11. அகம் 366; 12-13. 12. அகம் 896; 16-19. 13. அகம் 348; 5-6. 14. அகம் 351, 5-7.

15. அகம் 356, 18-20. 16.ஐங் 178; 2-4.