பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சங்க இலக்கியத்தில் உவமைகள்

வாழ்வு காதல் வாழ்வுக்கு உவமை ஆகியது. அவர்கள் வீரவாழ்வின் அனுபவம் உவமச் செய்தியாகியது.

1.2.7 மற்றும் சில அகவாழ்வு நிகழ்ச்சிகள் புறத்திணை நிகழ்ச்சிகளோடு உவமை வழித் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இவை வரலாற்று நிகழ்ச்சிகளாக அமையாமல் இடமும் பெயரும் சார்பு படுத்தாமல் கூறப்படும் புறப்பொருள் நிகழ்ச்சி களாக அமைந்தவையாகும். தலைவியின் தனிமையும், துயி லற்ற நிலையும், அழிந்து பட்ட எழிலைக் காக்கும் தனிமகனின் தனிமைக்கும், கவலைக்கும் உவமிக்கப்பட்டுள்ளன. துயி லின்றி இரவினைக் கழித்த தலைவியின் நிலை, போர்ப்பா களில் துயிலின்றிக் கண் விழித்த போர் வீரர்களின் நிலைக்கும் தலைவன் வருகையால் தலைவியின் பசலை நீங்குதல், ஆற்றலும் செங்கோனமையும் வாய்ந்த அரசரின் வீரர்கள்முன் பகைவர்கள் நீங்குதலுக்கும், மகளை வீரனுக்கு மணமுடித்தல் பாண்டிய மன்னனுக்குத்திறை கொடுத்தலுக்கும்."தலைவியின் பிரிவுத் துன்பம் பகை மன்னன் தங்கும் நாட்டின் மக்களின் துன்ப நிலைக்கும், தலைவன் தலைவிக்குப் பணிதல் சினவேந்தன் முன் மக்கள் அடிபணிதலுக்கும்." தலைவனைச் சார்ந்து நிற்கும் தலைவியின் மனநிலை சேர மன்னனுக்கு அஞ்சி அவனைச் சார்ந்து அடிபணிந்து நிற்கும் மக்கள் மனநிலைக்கும், தலைவியின்பால் தலைவன் காணும் இனிமை வினை முடித்தது போன்ற மன நிறைவுக்கும்." வளையல் நெகிழ்ந்து விழுதல் ஆரியர் படை அஞ்சி நீங்குதலுக்கும்’ தலைவியின் மன மகிழ்ச்சி வென்றி நாட்டைக் கைக்கொள்ளும் வேந்தனின் மனநிலைக்கும்,' தலைவன் தலைவியின் உறவைப் பெற வேண்டித் தோழியின்பால் இரந்து நிற்றல் போரில் புண்பட்ட வீரனைப் பேய் சுற்றி நின்று காத்தலுக்கும்" உவமிக்கப் பட்டுள்ளன. பேய் நின்று காக்கும் செய்கையைப் பேய்க்காஞ்சி என்னும் துறையாகக் குறிப்பிடுதல்தொல்காப்பியத்தில் காணப் படும் புறப்பொருள் மரபாகும்.

1. நற். 153; 8.10. 2. குறு. 91; 5-8; 292, 6-8. 3. கலி. 130, 19-21. 4. கலி. 14; 24-25. 5. கலி. 149; 10-11. 6. ఉషో, 89; 10-11. 7. அகம். 309; 10-12. 8. அகம். நற். 38. 9. அகம், 336; 21-23 10. அகம். 346; 18-25.

11. நற். 349; 7.10.