பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சங்க இலக்கியத்தில் உவமைகள்

புறப்பொருள் செய்தியாகிய ஈகை பற்றிய அச்சம், மகளிர்

ஊடல் பற்றிய அச்சத்திற்கு உவமைப் படுத்தப்பட்டது.

ஒண்ணுதல் மகளிர் துணித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவு -பதி. 57. 13-15

1.2.9.2. பெண்ணின் காதலை விட ஈகை மிகச் சிறந்தது

என்று ஓரிடத்தில் பாராட்டப்படுகிறது.

இவளினும் சிறந்தன்று ஈதல் -அகம்.131; 3-5.

1.2.9.3. முல்லை நிலத்து ஆயர் மகன் ஏறுதழுவி அதனை அடக்கி வெற்றி கொள்ளும் செயல் ஆயர் மகளிரைக் காதல் வேட்கையால் புல்லுவதற்குக் குறிப்பாக உவமை செய்யப் பட்டுள்ளது. தாம் விரும்பும் மகளிரின் மார்பகத்து முலை யிடைத் தழுவுவதைப் போல விரும்பிக் கொல்லும் எருதின் கொம்புகளிடையே பாய்ந்து வெற்றி கொள்ளும் ஆண் மகனிடத்து வேறு எந்த விலையும் தம் இனத்தவர் விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்

கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின்

முலையிடைப் போலப் புகின்

-&63). 103. 71-73.

1.2.10. ஒரு சில புலவர்கள் தம்முடைய உவமைகளில் செய்திகளை இடத்தோடு சார்த்திக் கூறலை இயல்பாகக் கொண்டு விளங்குகின்றனர்.அவர்கள் அவ்வூர்களில் வாழ்ந்தவர் களாக இருந்திருக்க வேண்டும் எனக்கருத இடம் தருகிறது. அவ்வூர்ப் பெயர்கள் அப் புலவர்களுக்குச் சார்த்தி அடைகளாக வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் எடுத்தாண்ட உவமைகளில் அவ்வப் பெயர்கள் பொருந்தியுள்ளன என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். உவமச் செய்திகளில் வரும் ஊர்ப் பெயர்களால் சிறப்புப் பெற்றவர்கள் குடந்தைக் கீரனார், அள்ளுர் நன் முல்லையார். மதுரைக் கணக்காயனார் ஆவர். அவர்கள் இப் பெயர்ச் சிறப்புப் பெறுவதற்குக் கீழ்வரும் உவமைகள் துணை

யாயின எனக் கூறலாம்.

தண்குட வாயில் அன்னோள். - -அகம். 44/18 குடந்தைக் கீரனார்.

1. அகம் 256; 13-21. - 2. நற். 216; 8.11.