பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை இறைச்சி 177

செய்தியாகும். இவை அவர் காலத்து இலக்கியங்களில் பயின்று வந்த மரபுகளாகும்.

3.4.10. குறிப்பிட்ட செய்திகளைத் தொகுத்துக் கூறு மிடத்து உள்ளுறை என்பது உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு ஆகிய அமைப்புகளை கொண்டு குறிப்பாகக் கொள்ளப் படும் உவமை வகை ஆகுமென்பதும், வினை, பயன், மெய் உரு, பிறப்பு ஆகிய இயல்புகளின் அடிப்படையில் உவமச் செய்திகள் பெறப்படும் என்பதும், இவற்றால் இனிதுறு கிளவியும் துணியும் கிளவியும் அமையும் என்பதும்,இவை ஒருசிலர் உரையாடலில் பயின்று வரும் மரபைப் பெற்றுள்ளன என்பதும் புலனாகின்றன.

3.5. இறைச்சிஎன்பது உள்ளுறையைப் போல அகப் பொருள் இலக்கியங்களுள் எடுத்தாளப்படும் பொருள் நய உத்தியாகும். இக் காரணம் பற்றியே தொல்காப்பியப் பொருளியல் கற்பியல்களில் இது விளக்கப்படுகிறது.இறைச்சி என்பதற்குக் கருப்பொருள் எனப் பொருள் கொள்ளப் படுதலைக் காண இயலுகின்றது. மற்றும் உடனுறை என்ற தொடருக்கு இறைச்சி என்ற பொருளை ஆசிரியர் நச்சினார்க் கினியர் தருவதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். கருப்பொருள் செய்திகளில் உடனுறைகின்ற குறிப்புப் பொருளையே இறைச்சி எனக் கொண்டனர் இறை என்பது இறு என்பதன் திரிபாகக் கொண்டால் இறைச்சி என்பதற்குத் தங்குதல் என்னும் பொருள் கொள்ள இடம் தருகிறது.

3.5.1. இறைச்சி என்பது கருப்பொருளின் புறத்ததாகவே பெறப்படும் குறிப்புப் பொருள் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும். இதற்கு துணை செய்வது; இறைச்சி தானே பொருள் புறத்துவே" என்னும் சூத்திரமாகும். எனினும் உள்ளுறை உவமங்கள் பல இறைச்சியாக உரையாசிரியர் களால் கொள்ளப்படுகின்றன. இவற்றை நோக்கும்பொழுது கருப்பொருளின் புறத்ததாகக் கொள்ளப்படும் இறைச்சி வேறு. உவமை வழியாக உள்ளுறையைப் போல அமைக்கும் இறைச்சி வேறு என்று கொள்ள வேண்டியுள்ளது. ஆசிரியர்

1. தொல்.பொருளதிகரம் 301,302,304.

2. தொல்.பொருள்.229,230,231:கற்புயல்148,

3. தொல்.பொருள்.231:கற்பியல் 148;நச் உரைகள் 3/12-13-19;3/16-1;

நச்,உரை.குறு.3/4-5(மேற் கோளாட்சி தொல்,பொருள், 33 இள பூரணர் உரை)