பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சங்க இலக்கியத்தில் உவமைகள்

கோயிலுள் யாமுமுளமாகி இல்லறம் பூண்டு விருந்தோம்பு கின்றனம். அதுபோல வென்பதாகலான் உவமைக்குப் பிறிதொரு பொருள் எதிர்ந்து உவமஞ் செய்யாது ஆண்டுப் பிறந்தன வற்றோடு நோக்கிக் கருத்தினாற் கொள்ள வைத்தலின் இஃது உள்ளுனறை யுவமமாயிற்று. அவற்றுள்ளும் இது சுரும்பு பசி களையும் தொழிலோடு விருந்தோம்புதல் தொழில் உவமங் கொள்ள நின்றமையின் வினையுவமப் போலி யாயிற்று. இங்ங்னங் கூறவே இதனை இப்பொருண்மைத் தெல்லாம் உணருமாறு என்னையெளின் முன்னர் துணிவோடு வரூஉந் தணிவினோர் கொளினே எனல் வேண்டியது அதன் அருமை நோக்கியன்றே என்பது. அல்லாக்கால் கரும்பு நடு பாத்திக் கலித்த தாமரை சுரும்பு பசி களையும் பெரும்புனலூர என்பது பயமில் என்பது கூறலாமென்பது.

4.4.2. இவ்வாறே பய உவமப் போலி, மெய் உவமைப் போலி," உரு உவமைப் போலி," முதலியவற்றிற்கும் சங்கப் பாடல்களை எடுத்துக் காட்டாகத் தந்து தொல்காப்பிய உவம வியற் பகுதியை விளக்குவர். இச்சூத்திரங்களுக்கு மாறுபட்ட கருத்தும் உளது என்பது இளம்பூரணர் உரையால் தெரிகிறது.

4.4.3. உள்ளுறை வினை, பயன், மெய், உரு, பிறப்பு என்ற பாகுபாடுகளைக் கொண்டது என்பது பேராசிரியர் கருத் தாகும். இளம்பூரணர் இப் பகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தருவது குறிப்பிடத்தக்கதாகும். அவர் கருத்தின்படி உவமப்போலி என்பது உவமையைப் போன்று வருகின்ற ஒருசில. அணி வகைகளைக் குறிக்கின்றது. அவையே வினை. பயன், மெய், உரு, பிறப்பு என்னும் ஐவகைக் காரணங்களால் அமையும் என்பதும் அவர் தரும் விளக்கமாகும். மற்றும் உள்ளுறை உவமைகளை இன்னின்னார் இவ்விவ் வகையில் கூறுவர் என்னும் கருத்தினைப் பேராசிரியர் வற்புறுத்துவர். இவை ஏனை உவமங்களுக்கே பொருந்தும் என்பது இளம்பூரணர் தரும் விளக்கமாகும். பிற்கால உரையாசிரியர்கள் பேராசிரியரைப் பின்பற்றியே உரை வகுத்துச் சென்றுள்ளனர் என்பது அவர்கள் வினை உவமம், பய உவமம், உரு உவமம், பிறப்பு உவமம் எனத் தெரித்துக் காட்டுவதால் புலனாகின்றது. 4.5. பொருட் புறத்தனவாக அமையும் இறைச்சிக்கும் உவமை வழிஅமையும் இறைச்சிக்கும் வேறுபாடு உள்ளது.

1. இறைச்சி.ஐங் 17723. உள்ளுறை-ஐங் 1514 2. தொல் உவம சூ. 25. பேரா. உரை, 3. ஐங். 12. 4. குறு. 208. 5. ஐங் 73.