பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சங்க இலக்கியத்தில் உவமைகள்

12.12. நிந்தை உவமை

உவமையையேனும் பொருளையேனும் இகழ்வுபடக் கூறலை நிந்தை உவமை எனலாம். இஃது எள்ளல் சுவை தோன்ற அமைகிறது. பின்னர் விளக்கப்படும் வேற்றுமை அணியிலும் இவ் எள்ளல் சுவை அமைந்துள்ளது எனினும் இதில் இச்சுவை மிகுதி பெற்று வருவதால் இதனை வேறாகப் பிரித்து நிந்தை உவமை எனக் கூறுவது பொருந்தும்.

இந்நிந்தை உவமை பொருளை நிந்தித்தலும், உவமை யை நிந்தித்தலும் என இருவகைப்படும். இவற்றையே பழிப்பது போலப் புகழ்தல் அணி என்று கூறி வருகின்றனர்.

12.12.1. பொருளை நிந்தித்தல் கீழ்வரும் உவமையில் காணப்படுகிறது. 'பாரி பாரி என்று பலவாறாகச் சிறப்பித்து ஒருவனையே புலவர் புகழ்ந்து வருகின்றனர். பாரி ஒருவன் மட்டும் அல்லன், மழையும் இந்த உலகத்தைக் காத்து வருகின்றது' என்று இகழ்வது போலப் பாரியின் கொடைத் திறத்தை மழைக்கு உவமைப்படுத்துகின்றது புறநானுற்றுப் LITL–60.

இதனை விலக்குவமைக்கு எடுத்துக்காட்டாகக் காட்டுவர் தண்டி உரையாசிரியர்.

12.12.2. உவமையை இழித்தும் பொருளை உயர்த்தியும் சொல்லுதல் உண்டு. தலைவியின் மாசு மறுவற்ற அழகிய முகத்தைக் கண்டு இவ்வழகும் பொலிவும் தனக்கு இல்லையே என்று திங்கள் ஏங்குவதாகக் கூறுகின்றது சிறுபாணாற்றுப்

LI65) L.

மதிஏக் கறுஉம் மாசறு திருமுகம். -பத். 3/157

12.13. நிரல் நிறை உவமை

உவமைகள் ஒன்றன்பின் ஒன்று அடுக்கிக் கூறப்படு கின்றன. அவற்றை அடுத்து அதே முறை வைப்பில் பொருள்

களும் அடுக்கிக் கூறப்படுகின்றன. இதனை நிரல் நிறை உவமை என்று தொல்காப்பியம் கூறும்.

நிரல் நிறுத் தமைத்தல் நிரல் நிறை -தொல். சூ.309 ஒழுங்காக முறை பிறழாமல் அமையும் உவமை அடுக்கினை

1. புறம். 107/1-4