பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 45

தீங்கதிர் மதியேய்க்குந் திருமுகம் அம்முகம் பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால் - கலி. 15/16-17

12.18.3. புறநானூற்றில் உவமைப் பொருள்களைத் தொகைப்படுத்திக் கூறும் பொழும் மாலை உவமை எடுத்தாளப் படுகிறது.

மண்திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரும் வளியும்

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்

வலியும் தெறலும் அளியும் உடையோய்.

- புறம். 2/1-8

இதில் நிரல் நிறை உவமமும் அமைந்துள்ளது.

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்தறிந்தோர் போல என்றும் இனைத்து என்போரும் உளரே. - புறம். 30/1-2

ஞாயிறு, பரிப்பு என்ற சொற்கள் மீணடும் மீண்டும் அந்தாதித் தொடையாக வந்துள்ளன. இவற்றைத் தொடை கருதி அந்தாதித் தொடை எனவும், உவமைகளுள் உள்ள தொடர்பு கருதி மாலை உவமை எனவும் கூறலாம். ஈண்டுத் தொடர்ச்சி உவமைகள் பற்றியதாம்.

12.19. முரண் உவமை அல்லது விரோத அணி

முரண்பாடு கொண்ட பொருள்களும் செய்திகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு உவமைகள் ஆக்கப்படுகின்றன.

இவ்வாறு அமைப்பதால் முரண் அழகு தோன்றுகிறது. இதனை யாப்பு நூலார் முரண்தொடை என்று கூறுவர். 2.- ok Ho LD

1. சொற்பொருள் முரணத் தொடுப்பது விரோதம் மாறன் 181.