பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சங்க இலக்கியத்தில் உவமைகள்

9.2. 'துரப்பு அமை ஆணி எண்ணாள் நிங்கள் வடிவிற்று ஆகி' (நற். 2/0-11) வடிவிற்று என்னும் விளக்கச்சொல் உவமை உருபின் பணியைச் செய்கின்றது.

9.3. நெய்த்தோர் நிற அரக்கு (பரி. 10/12) நிறம் என்ற விளக்கச் சொல் உவம விளக்கமாக வந்துள்ளது.

மேற்காட்டியவை அனைத்தும் வெளிப்படை உவமங் கள் எனக் கூறலாம். உவம உருபு கொடுத்தும்

கொடுக்காமலும் விளக்கச் சொற்கள் அமைந்தும் உவமை கள் பொருள்களோடு தொடர்பு பெறுகின்றன.

10. குறிப்பாக உவமைகளை அமைத்தலும் காணப் படுகின்றது. நேராக இன்ன பொருள் இன்ன பொருளை நிகர்க்கும் என்று கூறாமல் வேறு விதமாக நயம்படக் கூறி அவ்விளைவினை உண்டாக்குதலும் ஆங்காங்குக் காணப் படுகிறது. அத்தகைய இடங்களில் நேரிடைக் கூற்று அமையாத காரணத்தால் உவம உருபுகள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதில்லை. இவற்றைக் குறிப்பு உவமைகள் எனக் கூறலாம்.

10.1. 'யானைகள் வேங்கை மரத்தைப் புலி என நினைத்துப் பாய்கின்றன" என்று கூறும் நயம் மிக்க கூற்று நேரிடையாக உவமையை அமைக்கவில்லை என்றாலும் வேங்கை மரம் புலி போலக் காட்சி அளித்தது என்பது குறிப்பாக உணர்த்தும் உவமையாகும் இவ்வாறு குறிப்பாகக் கிளைத்தல் சங்க இலக்கிய உவம மரபுகளில் ஒன்றாகும்.

11. உவமைத் தொடர்களையும் அவற்றின் பொருள் அமைப்பையும் ஆராயும் பொழுது கீழ்க்காணும் சிறப் பியல்புகளைக் காண முடிகின்றது.

11.1. பொருளும் உவமையும் ஒன்றை ஒன்று நிகர்க் கின்றது என்று கூறும் கூற்றுப் பெரும்பகுதியாக வருகின்றது. இவற்றைச் சமநிலைக் கூற்று எனக் கூறலாம். உவம உருபுகள் இச் சமநிலைக் கூற்றாக நின்று உவமையையும் பொருளையும் இணைக்கின்றன எனக் கூறலாம். அன்ன, போல, புரைய, நேர், மான, ஒப்ப முதலியன நிகர்க் கூற்றைத் தெரிவிப்பனவாகும்.

1. கd, 49/1-9; அகம். 12-11; 228/10.12