பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சங்க இலக்கியத்தில் உவமைகள்

ஒவ் பு ஒப்பு ஒவ் தல் - ஒத்தல் ஒவ் கும் - ஒக்கும்

11.18. தொடர்நிலை உருபுகள்

தனிச்சொற்களேயன்றித் தொடர்நிலைச் சொற்களும் ஒன்றாக இணைந்து உவம உருபுகளாக அமைகின்றன. உறழ்கொள, உறழ்நிலை கொண்ட, எதிர்காலும், எதிர்படு, எழில் இழந்த, எனக்கடுக்கும், எனக் கருதிய, எனக்கொள்ளும், எனமருளும், ஏர் அன்ன, கவின் கொண்ட, நலமிழந்த, நேர் ஒப்பின், நேர்நிரந்து, புறங்கொடுத்த, போன்மென, மலைத்து அமர்ந்த மலைத்து அன்ன, மாறுகொள்ளும், மாறுகொள்வது போலும், மாறுமலைக்கும், முரண்கொள்ளும், வடிவிற்று, வனப்பிழந்த, வனப்புற்ற, வனப்பேந்திய முதலியவை தொடர் நிலைச் சொற்களாம். இவை இணைக்கும் உருபுகளாகச் செயல்படுகின்றன.

12. உருபுகளின் எண்ணிக்கை விவரம்

உவமை உருபுகள் பலவாயினும் அவை அனைத்தும் ஒரே அளவில் வருகின்றன என்று கூறுவதற்கு இல்லை. ஒருசில உருபுகளே மிகுதியாக இடம்பெறுகின்றன. ஒரு சில மிக அருகிலே வழங்குகின்றன. போல என்பதும், அதன் மாற்று வடிவங்களும், அன்ன என்பதும், அதன் மாற்று வடிவங்களும் மிகுதியாக வழங்குகின்றன. ஏனைய கடுக்கும், மான, புரைய, ஒப்ப, உறழ, ஏய்ப்ப முதலியன அருகிய வழக்காகும். சங்க நூல்கள் அனைத்தும் ஒரேகாலத்தன அல்ல என்பதாலும் அவை தமக்குள்ளேயே கால இடைவெளி ஒருசிலவற்றிற்கு இருப்ப தாலும் இவ் உருபுகளின் பயிற்சி வேறுபடுகின்றன.

13. தொல்காப்பியம் தரும் உவம உருபு

சங்க காலத்து உவம உருபுகளில் ஏற்பட்ட மாறுதல்களை அறிய இவற்றைத் தொல்காப்பியர் காட்டும் உவம உருபு களோடு ஒப்பிட்டு ஆராய்வது இன்றியமையாதது ஆகும். தொல்காப்பியர் காலத்து வழங்கிய உவம உருபுகளோடு சங்க காலத்து வழங்கிய உவமஉருபுகள் பெரிதும் ஒத்து இயங்கு கின்றன. எனினும் ஒரு சில வேறுபாடுகளும் காணப் படுகின்றன. இவ் ஒப்புமை ஆய்வு கீழ்த்தரப்படும் செய்திகளை

உணர்த்துகின்றது.