பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவம உருபுகள் 65

இப்புதிய உருபுகள் இடம் பெற்றுள்ளன. மற்றும் தொல்காப்பியர் காலத்தில் வினை, பயன், மெய், உரு என்று வகைப்படுத்தி அவற்றிற்கு என வரையறை செய்யப்பட்ட உருபுகள் அவ்வரையறையைக் கடந்து ஏனையவற்றிற்கும் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒன்றற்கு என்று வரையறை செய்யப்பட்ட உவம உருபு ஏனைய தன்மைக்கும் வந்துள்ளது.

14.4. ஒருசில எடுத்துக்காட்டுகள் இக் கொள்கையை வலியுறுத்தும். இதை உரையாசிரியராகிய பேராசிரிய,ே எடுத்துக்காட்டியுள்ளார்.

14.4.1 'ஏய்க்கும் என்பது மெய் உவம உருபு என்ப ஆசிரியர் தொல்காப்பியனார்.

'ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்'

-கலி, 20/11

ஏய்க்கும் ஈண்டுப் பயன் உவம உருபாக வந்துள்ளது. வாயில் ஊறும் நீர் அமிழ்தினை ஒத்து இருக்கும் என்பதில் பயன் ஆகிய தன்மையே வற்புறுத்தப்பட்டுள்ளது. ஈண்டு வடிவு சிறப்பிக்கப் பெறவில்லை.

14.4.2. கடுக்கும்' என்பது மெய் உவமை என்பது தொல்காப்பியனார் கருத்தாகும்.

கார்மழை முழக்கிசை கடுக்கும் -அகம் 14/20 ஈண்டுக் கடுக்கும் என்பது செயலையே வற்புறுத்து கின்றது. கார் காலத்து மழை முழவின் இசையை நிகர்க்கும் என்பது இத் தொடர் உணர்த்தும் கருத்தாகும். முழவு ஒலி இசைப்பது போல மழை ஒலி இசைத்தது என்பதாம்.

14.4.3. 'போல' என்பது உருவினை உணர்த்தும் உவம உருபு என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும்.

ஒளித்தியங்கு மரபின் மறப்புலி போல

-அகம். 22/15

தலைமகனின் செயல் புலியின் செயலுக்கு ஒப்புமைப் படுத்தப் பட்டுள்ளது. ஈண்டுச் செயலே வற்புறுத்தப்பட்டுள்ளது.

1. தொல். சூ. 291 பேராசிரியர் உரை. பக். 79.