பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சங்க இலக்கியத்தில் உவமைகள்

3. சங்க இலக்கியத்தில்

உருவகங்கள்

1. தொல்காப்பியர் உவம இயலில் உருவகத்தைப் பற்றி யாதும் குறிப்பிடவில்லை என்பது தெரிகிறது; எனினும்,

பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃது உவமம் ஆகும்

-தொல்.சூ. 284

என்னும் சூத்திரத்திற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. பொருளே மாறி உவமையாக நின் றாலும் அஃது உவமையாகும் என்னும் கருத்தும்.' பொருளே உவமமாகின்ற நிலையாகிய உருவகமும் உவமமாகும் என்னும் கருத்தும் உளதாக உரையாசிரியர்கள் காட்டுவர். இவை தவிர உருவகத்தைப் பற்றிய செய்திகளோ அவற்றின் தனி உருபு களோ தொல்காப்பியத்தில் யாண்டும் கிளக்கப்படவில்லை.

2. சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை உவமை களைப் பற்றிக் கிடைக்கும் செய்திகளைப் போல உருவ கத்தைப் பற்றி அதிகம் கிடைக்கவில்லை. எனினும் ஒரு சில எடுத்துக்காட்டுகள் சிதறி ஆங்காங்குக் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு அவற்றின் அமைப்புகளையும் சிறப் பியல்புகளையும் காணமுடிகிறது.

3. உவமை என்பது உவமையும் பொருளுமாகத் தனித்து இயங்குவது. உருவகம் என்பது பொருள் உவமையோடு ஒன்றிவிடுவது என்று கூறலாம். 'உவமையும் பொருளும் வேறுபாடு ஒழிவித்து ஒன்று என அமைத்தால் அஃது உருவகம் ஆகும் என்பது தண்டியாசிரியர் உணர்த்தும் கருத்தாகும்:

4. பொருள் இல்லாமலேயே உவமச் செய்திகள் உருவகங்கள் ஆகிவிடுதல் உண்டு. பயின்றுவரும் மரபால்

1. தொல். பேராசிரியர் உரை-பக். 69. 2. தொல். இளம்பூரணர் உரை-பக். 401. 3. தண்டி. சூ. 36