பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகங்கள் 71

7.1.3. கார் காலத்தில் முல்லை மலர்தலை முகையை எயிறாகக் கொண்டு நகுவதாகக் கூறப்படுகிறது. ஈண்டு முல்லை முகை பொருள் ஆகிறது; எயிறு உருவகம் ஆகிறது.

தொகுமுகை இலங்கு எயிறாக நகுமே தோழி நறுந்தண் காரே. - குறு 126/4-5

7.1.4. கல்வியை ஆற்றல் மிக்க சிறுவனாக உருவகப் படுத்தி உள்ளனர். நுட்பமான கருத்துகள் பருமையான வடிவம் பெறுவதற்கு இத்தகைய உருவகங்கள் பயன்படுகின்றன.

கல்வி என்னும் வல்லாண் சிறா அன் -புறம். 346|3

7.1.5 பருப்பொருள் உருவகங்கள் ஆகி நுண் பொருட்கு அமையும் தனிநிலை உருவகங்கள் வேறு சிலவும் வந்துள்ளன.

பருவரல் வெள்ளம். -நற். 33/4 கங்குல் வெள்ளம். -குறு. 387/5 சினத்தி. -பத். 6/31 நீத்தது அவல மறுசுழி. -புறம். 238|17-18 பகைக் கூழ் அள்ளல். -புறம். 185/3

7.1.6. பருப்பொருள்களே பருப்பொருள்களுக்கு உரு வகங்கள் ஆகி உள்ளன. அவை சூழ்நிலை ஒட்டி உருவகக் காட்சிகளாக அமைக்கப்படுகின்றன. கூந்தலை மெல்லணை யாக உருவகப் படுத்தியுள்ளது சூழ்நிலை பற்றி அமைந்த உருவகமாகும். கூறுபவனின் உணர்வுப் பெருக்கு இதற்குத் துணை செய்கிறது.

கூந்தல் மெல்லணைத் துஞ்சி. -அகம். 308/13

7.1.7. உருவகமாகக் கூற வேண்டிய சூழ்நிலை இல்லாமல் இயல்பாக அமைந்த உருவகமும் உளது. சிறுவர்கள் வாய்வைத்து உரிஞ்சும் பனை நுங்கு விரும்புகின்ற முலையாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

மனையழுது ஒழிந்த புன்தலைச் சிறா அர்

துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின்

பணைகொள் வெம்முலை பாடுபெற்று உவக்கும்.

-நற். 392/3-6

சுவைப்பதற்குரிய கொங்கை போறலின் நுங்காகிய முலை என்றார் என்பர் உரையாசிரியர்.