பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சங்க இலக்கியத்தில் உவமைகள்

கண் பொன் போர்த்தனவே. -ஐங். 16/4 ஈண்டுக் கண்களின் பொலிவற்ற தன்மை பொன்னின் நிறுத்துக்குக் குறிப்பாக உவமப் படுத்தப்பட்டுள்ளது.

7.3.2. இத்தகைய அமைப்புகள் பத்துப்பாட்டில் ஒரு தனி அமைப்பாக இடம் பெற்றுள்ளது. அதனை ஒரு சொல்லியல் மரபாகப் போற்றி வந்தனர் என்பது தெரிகிறது. இவ் எடுத்துக்காட்டுகள் சிறுபாணாற்றுப் படையிலும் முல்லைப் பாட்டிலும் அமைந்துள்ளன. அன்னம் போலத் தாழை பூத்தது என்றும், பொன் போலச் செருந்தி விளங்கியது என்றும், மணி போல முண்டகம் ஒளிவிட்டது என்றும், முத்துப் போலப் புன்னை முகைத்தது என்றும் கூறாமல் உருவகங்களை மட்டும் வைத்துக் கூறிப் பொருளைக் குறிப்பிடாமலேயே விடுகின்றது சிறுபாணாற்றுப்படை.

அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும் கொடுஞ்சூல் முண்டகம் கதிர்மணிகழலவும் நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்.

-பத். 3/146-149 7.3.3. இதே போன்று இந்நூலில் மற்றோர் சான்றும் கிடைக்கிறது. அவரை பவழத்தைக் கோத்தும் காயா கணமயில் அவிழ்த்தும், முசுண்டை கொட்டம் கொண்டும், காந்தள் கைவிரல் பூத்தும் விளங்கின என்று கூறப்படுகின்றது. பைந்தனை அவரை பவழம் கோப்பவும் கருநனை காயா கணமயில் அவிழவும் கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்.

-பத். 3/164-167

7.3.4. முல்லைப் பாட்டிலும் இத்தகைய வருணனை ஒன்று இடம் பெறுகிறது. காயா அஞ்சனம் மலர்ந்தும் கொன்றை பொன்னை வெளிப்படுத்தியும், காந்தள் கையாக அவிழ்ந்தும், தோன்றி குருதியாகப் பூத்தும், முல்லை நில வழிக்காட்சி அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறிஇணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடல் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கானம் நந்திய செந்நிலப் பெருவழி -பக். 5/93-97