பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 89

பறம்பு மலையின் பனிச்சுனையும், இமயத்து மழையும், தைத்திங்களில் நிறையும் நீர்நிலைகளும், விடியலில் மலரும் பூக்களும் பயின்ற உவமைகளாக வருகின்றன. முத்து அதனைச் சார்ந்த கொற்கையாலும், பாவை கொல்லி என்னும் ஊராலும், பனிச்சுனை பாரியின் பறம்பாலும், மழை இமயத்தாலும், நீர்நிலைகள் தை மாதத் தொடர்பாலும், மலரும் பூக்கள் விடியற் பொழுதாலும் சிறப்புப் பெறுகின்றன.

1.8.1. காலத் தொடர்பு பெற்ற உவமைகள்

விண்ணின் மீனும், வானத்து மதியும், விடியல் வானமும், நெய்தல் மலர்ச்சியும் வைகறையோடு தொடர்பு பெறுகின்றன.

1.8.1.1. வைகறை மீன்

1. கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ

வைகுறுமீனின் நினையத் தோன்றி. -குறு. 48/3-4

2. நெய்யுமிழ் சுடரில் கால்பொரச் சில்கி

வைகுறு மீனில் தோன்றும் மைபடு மாமலை விளங்கிய சுரனே. -அகம். 17/20-22

3. ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட

வைகுறு மீனின் பைபயத் தோன்றும் நீர்ப் பெயற்று. -பத். 4/317.9

1.8.1.2. வைகறை மதியம்

வைகுநிலை மதியம் போலப் பையென் புலம்புகொள் அவலமொடு புதுக்கவின் இழந்த

-அகம். 299/11-12

1.8.1.3. விடியல் வானம்

விடியல் வியல்வானம் போலப் பொலியும் நெடியாய். -பரி. 19/83-84

1.8.1.4. நெய்தல் வைகறையில் மலர்தல்

கொற்கைப் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போலத் தகைபெரி துடைய காதலி கண்ணே. -ஐங். 188/3-4.