பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

2. " பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்

ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலம் தீங்குழல் கேளாமோ தோழி' மேருமலையை மத்தாக, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்த மாயவன் - கண்ணன், இன்று நமது வழிபாட்டால் நமது பசுக்கூட்டத்திடையில் வருவானாகில் அவன் வாயினால் ஊதும் அழகிய ஆம்பல் குழலின் இன்னிசையைக் கேட்போமே, தோழி !

3. "கொல்லையம் சாரற் குருந்தொசித்த மாயவன்

எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையம் தீங்குழல் கேளாமோ தோழி தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை அணிநிறம் பாடுகேம் யாம்” கொல்லையைச் சார்ந்த இடத்திலே கஞ்சன் ஏவலால் வஞ்சகமாக வந்து நின்ற குருந்த மரங்களைச் சாய்த்து முரித்த மாயவன் - கண்ணன், நமது வழிபாடு காரணமாக இசைந்து நமது பசுக் கூட்டத்திற்குள் வருவானாகில் அவன் வாயினால் ஊதும் முல்லைக் குழலிசையைக் கேட்போம், தோழி !

இனி, அந்த யமுனைத் துறைவனான கண்ணன், அவனோடு ஆடிய நங்கை நப்பின்னை ஆகிய இருவரின் அழகினையும் பாடுவோம் என்றும் பாடுகிறார்கள்.

யமுனையாற்றில் நீராடிக்கொண்டிருந்த ஆயர்பாடிப் பெண்களின் ஆடைகளையும் அப்பெண்களின் வளையல்களையும் விளையாட்டாக எடுத்து ஒளித்து வைத்தான், கண்னன். அதனால் தளர்வடைந்து தங்கள் கைகளால் உடலை மறைத்துக் கொண்டு தங்கள் ஆடைகளைத் தரும்படி கண்ணனிடம் ஆயர் பெண்கள் வேண்டினர். அந்த லீலைகள் புரிந்த கண்னனின் வடிவழகைப் பாடுவோமா, அந்த அழகிய ஆயர் மகளிரின் வடிவழகைப் பாடுவோமா என்றும் உள்ளம் நெகிழ்ந்து பக்தி உணர்வோடு குரவைக்கூத்தில் அந்த இளம் பெண்கள் பாடுகிறார்கள்.