பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 161

கண்ணன், பலதேவன், நப்பின்னை ஆகியோர்களின் வே வகளில் உள்ளவர்களும் இதர மகளிரும் வட்டமாக நிலவறு கற்றிச்சுற்றி இடப்புறத்தும் வலப்புறத்தும் மாறி மாறிச் கற்றி ஆடினர், பாடினர். இதைச் சரியாக இசைத்துத் தாள |யத்துடன் ஆடிப்பாடியதை இசையில் வல்ல நாரதனாரே

முறைப்படுத்திக்கொண்டு சென்றார் என்று இங்குக் குறிப்பிட்டிருப்பது சிறப்பாகும். இந்தக் கருத்தையும் காட் ைெயயும் ஆழ்வார்களின் பாடல்களிலும் காணலாம்.

இந்த அழகிய ஆய்ச்சியர் குரவைக் கூத்தின் ஆடல்

ப ல்களைப் புகழ்ந்து ஆயர் முதுமகளான மாதரி றெப்பித்துக் கூறுகிறார். "மாயவன்தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்

கோவலர்தம் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர

ஆய்வளைச்சீர்க்கு அடிபெயர்த்திட்டு அசோதையார் தொழுதேத்தத்

தாதெருமன் றத்துஆடும் குரவையோ தகவுடைத்தே

கால்லாநாம்

புள்ளுர்க் கடவுளைப் போற்றுதும் போற்றுதும்

ம ஸ்வரிப் பாணியொன்று உற்று.” . மண்று ஆயர்முதுமகள் மாதரி கூறுகிறாள்.

கண்ணபெருமான் . தனது முன்னோனான பல

தேவனோடும் ஒவியம் பொறித்த வளையல்களையணிந்த கைகளையுடைய நப்பின்னைப் பிராட்டியோடும் ஆயர்குல இளமங்கையர்கள் தங்கள் கூந்தலும் மலர்மாலையும் கட்டவிழ்ந்து விழும்படி, ஆராய்ந்து அணிந்துள்ள வளையல்களின் ஒலியாகிய தாளத்திற்கேற்பத் தமது காலடிகளைப் பெயர்த்து மிதித்து, அசோதைப் பிராட்டியார், அக்காட்சியைக் கடவுள் காட்சியாகக் கண்டு தம்மை மறந்து கைகளைத் தலைமேல் வைத்துக் கூப்பித் தொழுது புகழும்படி முன்பு கோகுலத்தின் ஆயர்பாடியில் பூந்தாதுகளாகிய எருவை மன்றத்தில் ஆடியருளிய குரவைக் கூத்தேயாகும்; இப்போது நீங்கள் ஆடிய கூத்தும் என்றும் புகழ்ந்து இது பெருமைமிக்கது என்றும் பாராட்டிப் பேசினாள். மேலும் தோழியர்களே ! இனி நாமெல்லாம்