பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 171

கறந்த பாலுள் நெய்யேபோல்

இவற்றுள் எங்குங் கண்டுகொள் இறந்து நின்ற பெருமாயா

உன்னே எங்கு காண்கேனே?” a ன்று மாயவனைப்பற்றி நம்மாழ்வார் உள்ளம் கசிந்து

(டுகிறார்.

"ஊழி முதல்வன் ஒருவனே

என்னும் ஒருவன் உலகெல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே

படைத்துக் காத்துக் கெடுத்துழலும் ஆழி வண்ணன் என்னம்மான்

அந்தண் திருமா லிருஞ்சோலை வாழி மனமே கைவிடேல்

உடலும் உயிரும் மங்கவொட்டே'

. .ன்று நம்மாழ்வார் மிகவும் அற்புதமாகப் பாடுகிறார்.

3. அறியாமை யென்னும் மடமையிருள் தங்குவதற்கு ய றைவிடமாகத் தன் நெஞ்சத்தைக் கொண்டிருக்கின்ற கஞ்சன் (கம்சன்), தன்னைக் கொல்லுவதற்குச் செய்த பல வேறு வஞ்சகச் செயல்களைக் கடந்து, கடைசியில் அவனைக் கொன்று வென்றவனும், நான்கு திசைகளிலும் முனிவர்களும் தேவர்களும் கண்டு மகிழ்வதற்கு வழிபாடுகள் செய்தும் மறைகளைத் தொடர்ந்து முழங்கி அவைகளின் உட்பொருளை அறிந்துகொள்ளவும், தனிப்பெரும் பொருளாக நிற்பவனும், தன்பால் அன்பும் பக்தியும் கொண்டுள்ள பஞ்சபாண்டவர்களுக்காகத் துரியோதனன் முதலிய நூற்றுவர்பால் போர் நடத்திய அந்தக் கண்ன பெருமானைப் புகழாத நாக்குதான் ஒரு நாக்காகுமா? அக்கண்னனுடைய மூலப் பெயரான நாராயணா என்னும் பெயரைத் தொடர்ந்து கூறாத நாக்குதான் ஒரு நாக்காகுமா? என்று ஆய்ச்சியர் தங்கள் ஆடல் பாடல்களில் குரவைப் பாட்டாகப் பாடுகிறார்கள்.

இங்கு, திருமால் சீர் கேளாத செவி செவியன்று, கரியவனைக் காணாத கண் கண்ணன்று, நாராயணா என்று கூறாத நாவு நாவன்று என்று குரவைப்பாட்டில் மிகவும்