பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி

யிருள்தீர்ந் திவ்வைய மகிழ

அன்னமதா யிருந்தங் கறநூல் உரைத்த அதுநம்மை யாளும் அரசே”

என்னும் ஒர் அபூர்வமான கவிதை மூலம் திருமங்கை யாழ்வார், அன்னமாகி அறநூல் மறைகளை உரைத்த ஆண்டவனை வழிபடுகிறார்.

"கொலைகெழு செம்முகத்த களிறொன்று கொன்று

கொடியோன் இலங்கை பொடியா சிலைகெழு செஞ்சரங்கள் செலவுய்த்த நங்கள்

திருமாலை வேலைபுடை சூழ கலிகெழு மாடவீதி வயல்மங்கை மன்னு

கலிகன்றி சொன்ன பனுவல் ஒலிகெழு பாடல்பாடி யுழல்கின்ற தொண்ட

ரவர்ஆள்வார் உம்பர் உலகே" என்று திருமாலை வழிபட ஆழ்வார் அனைவரையும் அழைக்கின்றார்.

திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்தைப் பாடித் திருமங்கையாழ்வார் திருமால் வழிபாட்டைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

"மின்னுமா மழைதவழும் மேக வண்ணா! =

விண்ணவர்தம் பெருமானே! அருளாப் என்று அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த

அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை மன்னுமா மணிமாட மங்கை வேந்தன்

மாணவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப்

பழவினையை முதலரிய வல்லார் தாமே" என்று பாடி முடிக்கிறார்.

ஆழ்வார்களுள் ஒருவர் பொய்கையாழ்வார். அவர் மூவருள் ஒருவர். அவர் காஞ்சிபுரத்தில் ஒரு பொய்கையில் இருந்த தாமரை மலரில் தோன்றினார் என்பது ஐதீகம் அவர் பாடிய இயற்பா முதல் திருவந்தாதி எனப் பெயர் பெற்று அது பாசுரமாகப் பாடப்படுகின்றது. அவரைப்பற்றிக்