பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220. சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"பொலிக, பொலிக, பொலிக

போயிற்று வல்லுயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த -

நமனுக்கிங் கியாதொன்று மில்லை,

கலியும் கெடும்கண்டு கொள்மின்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்

மலியப் புகுந்திசை பாடி

யாடி யுழிதரக் கண்டோம்”

என்று தொடங்கி,

"கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணு. கினியன கண்டோம்” என்றும்,

"திரியும் கலியுகம் நீங்கித்

தேவர்கள் தாமும் புகுந்து பெரிய கிருதயுகம் பற்றிப்

பேரின்ப வெள்ளம் பெருக கரிய முகில்வண்ணன் எம்மான்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் இரியப் புகுந்திசை பாடி

எங்கும் இடம்கொண் டனவே !” என்று பெருமகிழ்ச்சி கொண்டு துள்ளிப் பாடுகிறார்; நம்மை யெல்லாம் பரவசப்படுத்துகிறார். இன்னும்,

"கொன்றுயிர் உண்ணும் விசாதி

பகைபசி தீயன வெல்லாம் நின்றில் வுலகில் கடிவான்

நேமிப் பிரான்தமர் டோந்தார்” என்றும் மகிழ்ச்சியுடன் பாடுகிறார்.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வாராய் வார என்று திருமாலை அழைப்பதாக ஆழ்வார் பாடிய பாசுரங்கள் தத்துவஞான விளக்கம் கொண்டவையாகும்.

“நீராட் நிலனாய்த் தியாய்க் காலாப் நெடுவானாப்,

சீராப் சுடர்க ளிரண்டாப்ச் சிவனாப் அயனானாம் கூரா ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால் வாராம், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே" என்று:ம்.