பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 239

மதுரைக் காண்டம் கட்டுரை க் காதையில், கடுங்கோபத்துடன் மதுரையை எரித்துக் கண்ணிரும் கம்பலையுமாய் வந்த கண்ணகியிடம், மதுராபதி தெய்வம், ஆறுதல் கூறி “பாண்டியர் கொற்றம் இயல்பாகக் கொடுங்கோன்மை கொண்டதன்று, ஊழ்வினையால் இப்பிழை ஏற்பட்டுவிட்டது, எமது வேந்தர் தமது காதில், மறைநாவோசையல்லது யாவதும் மணிநாவோசை கேட்டதுமில்லை" என்று கூறுவதைக் காப்பியக் கதை மதுரையின் பெருமையைக் குறிப்பிடுகிறது.

பொற்கைப் பாண்டியனது வரலாற்றுப் பெருமையை எடுத்துக்கூறிப் பாண்டியகுலப் பெருமையை விளக்கிக் கூறுகிறது. அத்துடன் பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பெருமைகளை விளக்க மற்றொரு செய்தியும் காப்பியத்தில் கூறப்பட்டிருக்கிறது.

"திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை

அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள்

புறவுநிறை புக்கோன் கறவைமுறை செப்தோன்

பூம்புனல் பழனப் புகார்நகர் வேந்தன்

தாங்கா விளையுள் நன்னா டதனுள்"

அறநெறியிலே செல்லும் செங்கோலையும், வீர நெறியிலே செல்லும் வாளையும், புறாவிற்காகத் தன் சதையைக் கொடுத்தோனும், பசுவிற்காகத் தன் மகனையே தேர்ச்சக்கரத்தில் இட்டு மாய்த்தோனும் ஆண்ட, நீர்வளம் மிக்க வயல்கள் நிறைந்த, பூமியே தாங்க முடியாத அளவில் விளைச்சல் குவிந்துள்ள சோழ நன்னாட்டைச் சேர்ந்த, அறிவில் சிறந்த ஒர் அந்தணன் இருந்தான்.

"வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன்,

குலவுவேல் சேரன் கொடைத்திறம் கேட்டு

வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த

திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக்

காடும் நாடும் ஊரும் போகி"

சோழவள நாட்டில் பிறந்த அறிவில் சிறந்த அந்தனன் பராசரன் என்பவன் பாரதப்போரில் இரு தரப்புப் படைகளுக்கும் பெரும்சோறு அளித்துக் கொடைச்சிறப்புக்