பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும்

இயற்கையில் கிடைக்கும் நிலவளம், நீர்வளம், க. கல்வளம், மலைவளம், வனவளம், ஆற்றுவளம், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் முதலியனவற்றைப் பயன்படுத்தி மனிதன் தனியாகவும், கூட்டாகவும், குடும்பமாகவும் குழுக்களாகவும், கூட்டங்களாகவும் சேர்ந்து கடுமையான பல முயற்சிகளையும் மேற்கொண்டு, தொழில்கள் பல செய்து, ம கழைப்பைச் செலுத்தி எண்ணற்ற செல்வங்களைப் பெருக்கி பனித வாழ்க்கையைப் படிப்படியாக மேம்படுத்தியிருக்கிறான். அரசுகள், அரசர்கள், ஆட்சி நிர்வாகங்களெல்லாம் அவ்வாறு வளப்படுத்தப்பட்ட மனித சமுதாய வாழ்வின் பதுகாவலர்களாக இருந்து பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அதற்காக அவ்வரசுகளும் அரசர்களும் ஆட்சி நிர்வாகங்களும் மக்களிடமிருந்து பகுதியும் பாகமும் வரியும் திறையும் பரிசுப் பொருள்களும் பெற்றிருக்கிறார்கள். மக்கள் ம யிாகவும், மன்னன் உடம்பாகவும் இருந்து நல்லாட்சி ந ைபெற்றிருக்கிறது. இதில் மன்னனுடைய கடமையும், மந்திரிகளுடைய கடமைகளும், ஆட்சி அங்கங்களில் உள்ள மற்றவர்களின் கடமைகளும், மக்களுடைய கடமைகளும் நமது பாரத நாட்டின் அரசியல் சாத்திரங்களில் வகுத்தும் தொகுத்தும் கூறப்பட்டிருக்கின்றன.

மறுபக்கம், ஆட்சி அதிகாரத்தில் அதிகாரக் குவியல் எற்பட்டபோது பல அரசர்களும் தங்கள் படை பலத்தைப் பெருக்கியும், படைச்செலவுகளுக்குப் பகுதிப்பணங்களையும், வரிகளையும் அதிகரித்தும், தங்கள் ஆட்சியின் அதிகார . ல்ெலையை விரிவுபடுத்திக்கொள்வதற்காகப் பல போர்களையும் நடத்தி, அதனால் பல கொலைகளும்