பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

என்றும், பகுதி பகுதியாகக் குவித்துப் பல வேறு வகையான நவதானியங்கள் விற்பனை செய்யப்படும் கூலவணிகர் வீதி இருந்தது என்பதை,

" பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்" என்றும் காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன. (கூலம் என்பது நவதானியங்கள் என்றும், நெல், புல், வரகு, தினை, சாமை, இருங்கு துவரை முதலிய எண்வகைத் தானியங்கள் என்றும், பல சரக்குகள் என்றும் பொருள் கூறலாம். கூலவணிகர் என்பது பிரபலம்)

பிட்டு வணிகர், அப்ப வணிகர், கள் விற்கும் வலைச்சியர், மீன் விற்கும் பரதவர், வெள்ளை உப்பு விற்கும் உமணர், வெற்றிலை விற்போர், ஐவகை மனப்பொருள் (இலவங்கம், கற்பூரம் முதலியன) விற்பவர்கள், பல வகை மாமிசங்கள் விற்பனை செய்வோர், எண்ணெய் விற்போர் முதலிய பல பிரிவு மக்களும் வாழும் பல வேறு குடியிருப்புகளும் வீதிகளும் இருந்தன.

" காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்

மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் " பாசவர், வாசவர், பன்னின விலைஞரோடு

ஒசுநர், செறிந்த ஊன்மலி இருக்கையும்"

என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

வெண்கல வேலைகள் செய்யும் கன்னார், செம்பு

வேலைகள் செய்யும் கொட்டியர், மரவேலைகள் செய்யும் தச்சர், வலிய கைகளை உடைய கொல்லர் (இரும்பு வேலை செய்பவர்), ஒவியக் கலைஞர்கள், பொற்கொல்லர்கள் (தட்டார்), சிப்பியர்கள், மண்கலம் செய்யும் குலாலர்கள், பொம்மைகள் செய்வோர், தோல் பொருள்கள் செய்வோர், துணியாலும், நெட்டியாலும் பல வகைப் பொருள்களைச் செய்யும் தொழில் முனைவோர் மற்றும் குற்றமற்ற பலவேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழும் குடியிருப்புகளும் இருந்தன.