பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

" பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்

அரிமுக அம்பியும் அருந்துறை இயக்கும் பெருந்துறை மருங்கில் பெயரா தாங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் தேமலர் நறும்பொழில் தென்கரை எய்தி”

என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன. மதுரை நகரம்

மதுரை நகரின் செல்வச் செழிப்பையும் அங்கு வாழும் மக்களின் மகிழ்ச்சியையும் கோவலன் கண்டதாக ஊர் காண் காதை குறிப்பிடுகிறது.

" செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு

வையம் காவலர் மகிழ்தரும் வீதியும்" அந்நகரில், வளம்மிக்க குடிப்பிறந்த மக்கள் மட்டுமன்றி அரசரும் விரும்பும் காமக்கிழத்தியர் வாழும் வீதிகளும் இருந்தன.

" பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல்

எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்" இனிமையான இசைப்பண்களையும் அவற்றின் திறங்களையும் மிஞ்சிய இன் சொல்லினர் என்று கூறும்படியாக உள்ள அறுபத்து நான்கு கலைகளிலும் வல்ல மகளிர் வாழும் இருபெரும் வீதிகளும்,

கம்மியரால் மிகுந்த தொழில் நுட்பத்துடன் திறமையாகச் செய்யப்பட்ட பல வகைப் பொருள்களும் கருவிகளும் ஆயுதங்களும் நிறைந்த கடைகளைக் கொண்ட அரசரும் விரும்பும் அங்காடி வீதிகளும்,

" வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய

அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்" வயிரமணி வகைகள், மரகதமணி வகைகள், புருடராக மணி, நீலமணி, கோமேதகம், வைடுரியம் முதலிய பல வகை மணிகளும், வைரக்கற்களும் நிறைந்த நவரத்தின வீதிகளும்,

" வகைதெரி மாக்கள் தொகைபெற்று ஓங்கிப்

பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும்"