பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவஜீவன் இயக்கம் 93 தோடு, தேசம் முழுதிலும் ஏகமனத்துடன் வேக மாகச் செயல்புரியவும், பெரிய தேசீய சுதந்திரப் படை அமையவும் வசதி ஏற்படும். ஊக்கமாகத் தொழில் செய்வதன் மூலம், ஒவ்வொருவரும் தேசத்தின் செல்வத்தைப் பெருக்க உதவி செய்ய முடியும் ; இத்துடன் தொழில் திறமையையும் வளர்த்துக்கொள்ள முடியும். இதல்ை நேரம் வீணுகாமலும், பொருள்கள் வீனகாமலும் பாது காக்க முடியும். கெளரவமாகக் கலே உணர்ச்சியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், மக்கள் சுதங் திரமாயும், அடக்கத்துடனும், அமைதியாயும் வளர்ந் தோங்க முடியும். சுருங்கச் சொன் ல்ை, வேகமாகவும், விருப்பத்துடனும், திட்டம் பிசகாமலும், செட்டும் ருேமாக வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும் ; உண்பதும் உறங்குவதுமாகச் சுயநலமே லட்சியமாகக் கொண்டிராமல் பரோபகாரச் சிந்தை யுடன் பரிசுத்தமாகவும் வாழவேண்டும். இவைகளே அநுசரித்து ஒவ்வோர் ஊரிலும் பலவிதமான விதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. கான்சாங் நகரில் சமையற் காரர்கள் சுத்தமாக இருப்பதற்கு மட்டும் பதின று விதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தனி நபர்களும், ஊர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிகள் மிகவும் கண்டிப்பாக அமல் கடத்தப் படுகின்றன. ஆயிரக்கணக்காகவும், லட்சக் கணக் காகவும் ஜனங்கள் கூடி, ஊர்வலங்கள் கடத்தியும்: பிரசங்கங்கள் நடத்தியும் இயக்கத்தைத் தேசம் எங்கும் பரப்பி வருகிருர்கள். ஜனங்களுக்கு உபதேசம் செய்யும் பிரசாரகர்களுக்கு முதலில் உபதேசம் செய்ய வேண்டிய அவசியத்தையும் அரசாங்கம் மறக்க வில்லை. 'கண்ட இடத்தில் துப்பாதே !', 'கும்பலாகக் கூடாமல் வரிசையாகச் செல்லுங்கள் ', சுத்தமாக