பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சியாங் கே-வேடிக் ஏனெனில், 1985-இல் மட்டும் ஹாப்பே, ஹாசனன், கியாங்ஸி, ஆங்வெய் மாகாணங்களில் வெள்ளத்தினுல் ஒரு கோடி அநாதைகள் திண்டாடும்படியும், ஐம்பது கோடி டாலர் பெறுமானமுள்ள பொருள்கள் சேத மாகும்படியும் நேர்ந்துவிட்டது. புதிதாகச் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஜனங்களைக் கட்டாயப் படுத்தி வேலை வாங்கும்படியும், தரிசு நிலங்களைத் திருத்திச் சாகுபடி செய்யவும், பொருள் வி தியோகத் தைத் திட்டம் செய்யவும், சுரங்கங்களின் உற் பத்தியைப் பெருக்கவும், சியாங் யோசனை கூறினர். இயற்கையின் சக்திகள் மக்கீளை அழித்துவிடாமல் பாதுகாத்தால்தான் வாழும் உரிமை இருக்கும் என்பதை அவர் மக்களுக்கும் எடுத்துக் காட்டினர். காலியாயுள்ள தோட்டங்களில் மரங்கள் கட்டு வைக்கவும், காடுகளை நெருப்பிட்டு அழிக்காமல் பாதுகாக்கவும் விசேஷ முயற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு ஒரு பக்கத்தில் ஜனங்களுடைய உடல் வலிமையும், ஒழுக்கமும், ஆத்மிக உணர்ச்சியும் வளர்க்கப்பட்டும், மறு பக்கத்தில் சுபிட்சமாக வாழும் வழிகள் அமைக்கப்பட்டும் வங்ததற்குச் சியாங் கேஷேக்குடன் பல விசேஷ நிபுணர்களும் ஒத்துழைத் தார்கள். இதன் பலகைப் பழைய கொள்கைகளும், பழக்க வழக்கங்களும், முறைகளும் காலு பக்கத்திலும் தாக்கித் தகர்க்கப்பட்டன. நுட்பமான நூதனக் கருவிகள் சிருஷ்டிக்கவும், பயிற்சி பெற்ற திறமை சாலிகள் தொழில்களுக்கு வரவும், உற்பத்திப் பொருள்கள் சில இடங்களில் மட்டும் தங்கிவிடாமல் பல இடங்களுக்கும் போய்ச் சேரும்படி வசதிகள் செய்யவும், அறியாமை, அவநம்பிக்கை, மூடப் பழக்கங்கள், சிக்கனமில்லாமை ஆகியவைகளுக்குப் பதிலாக நேர்மையான பொருளாதாரத் தத்துவங்கள் நிலைபெறவும் நாடெங்கும் பிரசாரம் கடந்தது. விவ