பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சியாங் கே-வேடிக் ஒருங்கே அமையப் பெற்று விளங்கினர் என்பதே சீனவின் பாக்கியமாயிற்று. "தாயொக்கும் அன்பில், தவமொக்கும் நலம் பயப்பில், சேயொக்கும் முன்னின்று ஒருசெல்கதி உய்க்கும் நீரால்...' என்ற புகழ் முழுதும் சியாங்குக்குப் பொருத்தமாக இருக்கிறது. ᏙᎥ பிறப்பும் வளர்ப்பும் 'நான் புரட்சிக்காகவே பிறந்தேன்." -சியாங் கே-வேடிக் ப0காத்மா காந்தி, லெனின், ஸ்டாலின், ரூஸ்வெல்ட் சர்ச்சில், சியாங் கே-வுேக் ஆகிய பெருந்தலைவர்கள் உலகத்தில் ஏக காலத்தில் தோன்றியதே பெரிய விசித்திரமாகும். இவர்களில் ஒவ்வொருவரும் நெருக்கடியான காலத்தில் தம்முடைய தேசத்திற்குத் தலைமை தாங்கி வழிகாட்டி வந்திருக்கின்றனர். ஒவ்வொருவருடைய திேசமும் வெவ்வேறு விலையில் இருப்பது. ஒவ்வொருவரும் மாறுபட்ட பல குணங் களேயும் அநுபவங்களையும் பெற்றவர். இவர் களுக்குள் எத்தனை வேற்றுமைகள் இருங்த போதிலும், உலகத் தலைவர்கள் என்ற மாலையில் இவர்களே ஒளியுடன் திகழும் மணிகளாக எண்ணுவது வழக்கமா யிருக்கிறது. இவர்கள் எல்லோரிலும், கொடிய இன்னல்களைத் தாண்டி, அதிகக் கஷ்டமான கர்ரியங்க்ளேச் சாதித்து'வெற்றி கண்டவர் சியாங் கே-வுேக், சின்ன பின்னமாகச் சிதறிக்கிடங்த சீனவை ஒன்று படுத்தியவர் அவர்.