பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்லிங் தேவி 131 கடி ஷாங்காயில் அவர் சார்லஸ் ஸ்குங் வீட்டுக்குப் ப்ோய்ப் புரட்சியைப் பற்றிக் கலந்து பேசுவது உண்டு. மூன்ருவது பெண்ணுகிய மெய்-லிங் 1917-ஆம் u அமெரிக்காவில் வெல்லெஸ்லி கலாசாலையில் படிப்பை முடித்துக் கொண்டு தாய்நாடு திரும்பி வங்திருந்தார். அவர் சங்கீதத்திலும், கலேயிலும் முதல் தரமாகக் தேறியிருந்தார். அவரை அப்பொழுது வாலிபத் தளகர்த்தராக இருந்த சியாங் கே-வுேக் காதலித்தார். சியாங்குக்கு முதல் மனேவி ஒருவர் இருந்ததால், முதல் விவாகத்தைச் சட்டபூர்வமாக அவர் ரத்துச் செய்து விட்டார். மெய்-லிங்கை மணந்துகொள் வதற்கு மற்ருேர் இடையூறும் இருந்தது. சியாங் பெளத்தர், காதலி கிறிஸ்தவர். ஆகவே பெண்ணேப் பெற்ற தாய் அவரையும் கிறிஸ்தவ மதத்தில் சேரும் படி கேட்டுக் கொண்டார். சியாங் அதைப் பற்றித் தாம் உறுதிகூற முடியாது என்றும், ஆல்ை கிறிஸ்தவ சமயத்தைப் பற்றித் தாம் ஆதரவுடன் படித்து அறிந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறிஞர். நி அம்மையார் அதற்குச் சம்மதித்து மெய்லிங்கை அவருக்கே மணம் செய்து கொடுத்து விட்டார். பின்னல் சியாங்கும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக் கொண்டார். சியாங்-மெய்லிங் காதல் கதை மிகவும் ருசிகர மானது. இருவரும் தம் குடும்ப கெளரவத்தையும் சொந்தக் கெளரவத்தையும் விட்டுக் கொடுக்காமலே இருந்து வந்தனர். ஆனல் இருவருக்கும் இடையே காதல் கனிந்து கொண்டிருந்தது. சியாங் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய மாதத் சம்பளம் 1,000 டாலர். மெய்-லிங் செல்வம் மிகுந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய மூத்த சகோதரி சீனவிலேயே பெரிய பணக்காரரான டாக்டர் குங்கின் மனைவியாயிருந்தார். அங் கிலையில் சியாங்கை எப்படி மணந்து கொள்வது? ஆளுல்,