பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியும் தோல்வியும் 145 சீனவுக்கு உரிய தொடர்புகள் ஆகிய விஷயங்களைப் பற்றியும் அவர் தெளிவான உயர்ந்த கட்டுரைகள் பலவற்றை எழுதி, அப்பத்திரிகை மூலம் பிரசாரம் செய்தார். ஜப்பானில் சிறிது காலம் இருந்துவிட்டு ஜெர்மனிக்கும் போய் யுத்தப் பயிற்சி பெறவேண்டும் என்று அவர் யோசனை செய்திருந்தார். சீனவில் வெகு சீக்கிரத்திலேயே யுவானுக்கு எதிரிகள் தோன்றிவிட்டார்கள். லீ லியே - சுன் என்ற தளகர்த்தர் கியாங்ளி மாகாணத்தில் யுவானின் படைகளை எதிர்த்து விரட்டி மாகாணத்தின் சுதங் திரத்தைப் பிரகடனம் செய்தார். நான் கிங், அன்வெய், குவாங்டுங், பூகியன், ஹ-ன்ை ஆகிய இடங்களிலும் யுவானின் ஆதிக்கம் கிராகரிக்கப்பட்டது. இவ்வாறு இரண்டாவது புரட்சி ஆரம்பமாகி, மறுபடியும் புரட்சிச் சக்திகள் பெருக ஆரம்பித்தன. சியாங் ஜெர்ம்னிக்குப் போகாமல் சீனுவுக்கே திரும்பி, ஷாங்காயில் சென் சி-மெய் முதலிய நண்பர் களோடு சேர்ந்துகொண்டார். ஷாங்காய் யுவா அனுடைய துருப்புகள் வசம் இருந்தது. முதலில் அதை விடுதலே செய்யும் போராட்டம் ஆரம்ப மாயிற்று. ஜூலைமீ 32-இல் ஷாங்காயிலுள்ள ஆயுதக்கிடங்கு மறுபடி தாக்கப்பட்டது. ஏராள மான படைவீரர்கள் அதைப் பாதுகாத்துக் கொண் டிருந்ததால் புரட்சிப் படைகளால் அவர்களை முறி யடிக்க முடியவில்லை. இரவு முழுதும் போராட்டம் நடந்தும், வெற்றி கிடைக்கவில்லை. புரட்சிக்காரர்கள் 9ேவ வரை விடாப்பிடியாகப் போர் புரிந்து வந்தும் பயன்படவில்லை. இரண்டாம் புரட்சி தோல்வியில் முடிந்துவிட்டது. இந்தப் போராட்டங்கள் தோல்வியில் முடிங் தாலும், புரட்சி வீரர்களுடைய பெருமையும் திறமையும் இவைகளின் மூலம் தெளிவாயிருந்தன். 6Ꭿ , 10