பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியும் தோல்வியும் 147 புரட்சிக்காரர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. சியாங் ஒரு முறை அங்கே சென்று நேரில் பல பகுதிகளில் சுற்றுப்பிரயாணம் செய்து பார்த்தார். வெளியிலிருந்து அங்கே போகும் புரட்சிக்காரர்களின் உயிருக்கு மிகுந்த அபாயங்கள் இருந்தும், அவர் அவைகளைப் பொருட்படுத்தாமல், புரட்சித் தலைவர் களைக் கண்டு பேசினர். மஞ்சூரியா அச்சமயத்தில் புரட்சிக்குத் தயாராக இல்லை என்று அவர் கருதிய தால், ஜப்பானுக்குத் திரும்பி, மற்றத் தலைவர்களிடம் தம் கருத்தை விளக்கி ஒர் அறிக்கையைச் சமர்ப் பித்தார். பின்னர், சென் சி-மெய் மீண்டும் வு.ாங் காய்க்குச் சென்று மூன்ருவது புரட்சியை ஆரம்பித்து வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டார். வடிாங்காய் அப்பொழுது அரசாங்கத்தின் வலிமை மிகுந்த கோட்டையாக இருந்தது. செங் ஜு-செங் என்ற அதிகாரி அங்கே பாதுகாப்புக் கமிஷனராக இருந்தார். அவர் மிகுந்த சாமர்த்தியசாலி, யுவான் வழி-கேயிடம் பற்றுள்ளவர். அவரை முதலில் தொலைத்தால் அன்றி வடிாங்காய் நகரில் ஒன்றும் கடக்காது என்பதைப் புரட்சிக்காரர்கள் கண்டனர். அவருக்கு மரண தண்டனை விதித்துவிடத் தீர்மானித் தனர். உடனே பத்து வாலிபர்கள் வெடிகுண்டுகள் முதலியவை தயாரித்துக்கொண்டு புறப்பட்டனர். ஒரு நாள் ஹாங்கோ ரஸ்தாவிலிருந்த ஒரு பாலத்தின் அருகே செங் மோட்டார்காரில் சென்றுகொண் டிருந்தபொழுது, புரட்சி வாலிபர்களில் இருவர் அவர் மீது குண்டுகளைப் பொழிந்து கொன்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தினல் யுவானுடைய ஆட்சியே ஆட்டம் கொண்டுவிட்டது என்று சொல்லலாம். வடிாங்காயிலிருந்த கப்பல் தலைவர்கள் சிலரும் புரட்சியில் கலங்துகொண்டார்கள். செளஹோ என்ற யுத்தக் கப்பல் (1918, டிஸம்பர், 5.வ.) ஆயுதக்