பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியும் தோல்வியும் 153 ஒழிப்பதற்காகச் சியாங் கே - ஷேக், ஒவ்வொரு. சிப்பாயின் பெயரையும் வாசித்து, அவரவர் நேரில் வந்து சம்பளம் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று. ஏற்பாடு செய்தார். இப்படி அவர் செய்துள்ள சீர்திருத்தங்கள் பல. துரோகிகளின் கும்பல்கள் இல்லாமல் இருந்தால், அங்தச் சமயத்திலேயே புரட்சி பூரணமான வெற்றியை அடைங்திருக்கும். சியாங்கின் தலைமையில் ஆயிரம் வீரர்கள் இருங் தனர். அவர்களே வைத்துக்கொண்டு அவர் பூகியன் மாகாணத்தின் படைகளே சுங்கெள நகருக்கு அருகே முறியடித்தார். எதிரிகளே வெகு துரம் விரட்டி விட்டு, அவர் சுங்கெள நகரையும் பிடித்துக் கொண்டார். பூகியன் ஜனங்களும் அவருக்கு உதவியாயிருந்தனர். எதிரிகள் சமாதானம் செய்து கொண்டனர். ஆனல் வஞ்சனேயாக மறுபடியும் தாக்குவதற்குத் தயாரித்துக்கொண் டிருந்தனர். அங்த கிலேயில் சியாங்குக்கு உதவிப் படைகள் அனுப்ப வேண்டிய தளகர்த்தர்கள், அவர் உத்தர வை லட்சியம் செய்ய மறுத்துவிட்டார்கள். வீராவேசத்துடன் போராடி வெற்றிபெற்ற ஒரு சிறு பட்ையுடன், முன் ல்ை பகைவர்களின் கொடிய வஞ்சனையை எதிர்த்தும், பின்னல் கண்பர்களுடைய வஞ்சனே யை எதிர்த்தும், போராடித் தப்பித்துக் கொள்ள வேண்டிய கிலையில் சியாங் சிக்கியிருந்தார். அவர் மிகவும் சாமர்த்தியமாகச் சேனை யைப் பின் வாங்கச் செய்து தப்பித்துக்கொண்டார். அப்பொழுது போராட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை ஆவரே கூறியிருக்கிருர் : இதிலிருந்து நான் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டேன். பின் உதவி இல்லாத ஒரு படை வெகு தூரம் முன்னேறிச் சென்ருல், அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு வழிதான் உண்டு. அது தன் குறிக்கோளே அடையும் வரை போராடிக்கொண்டே முன்னேறிப்