பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவின் புராதன நாகரிகம் 23 சந்திர விம்பத்தைக் கண்டு, அதைப் பிடிப்பதற்காகப் பாய்ந்து உயிரையே மாய்த்துக் கொண்டாராம் ! ஒரு ஜாடி மது அருந்தி, ஒரு நூறு கீதம் பாடுவார்' என்று பின் வந்த கவிகள் இவரைப் புகழ்வதுண்டு. ஏழைகளுடைய பசிப் பிணியைக் கண்டு வருங்தி, 'மாளிகைகளினுள்ளே மதுவும் மாமிசமும் அழுகிக் கிடக்கின்றன: மாளிகைகளுக்கு வெளியே மானிட எலும்புகள் அழுகிக் கொண்டிருக்கின்றன’ என்று டு-பு என்ற கவி பாடியிருக்கிருர். 'சித்திரத்திலுள்ள மலைகளை முதலில் பார்க்கிருேம், மலைகளிலுள்ள சித்திரத்தைப் பிறகே பார்க்கிருேம்’ என்று 17-ம் நூற்ருண்டுக் கவி ஒருவர் இயற்கை யையும் சித்திரக் கலையையும் ஒன்ருகப் பிணைத்துக் கூறியிருக்கிரு.ர். செந்தாமரை மலரை ஒரு கன்னிகையாகக் கருதி இயற்கை வெறி தலைக்கேறிய புலவர் ஒருவர். பாடியிருக்கிருர்: "மெல்லிய தென்றல் வீசும் பொழுது அவள் தன் பசுமையான முகத்திரையுடன் நீரில் மூழ்கி எழுகிருள். பக்கத்தில் யாருமில்லை என்ற தெம்பில்ை, அவுள் செக்கச் செவேலென்ற தன் மேனி முழுவதையும் காட்டு கிருள்” என்பது அவர் கூற்று. 1. - கம்பர் சீதையைச் செஞ்சொற் கவி இன்பம்' என்று வருணித்திருப்பதைப் போல், ஒரு சீனக் கவி, 'இவள் இடை, தென் சீனப் பாட்டைப் போல் மென்மையானது' என்று கூறியிருக்கிரு.ர். பொதுவாகச் சீனக் கவிகள் சீனர்களுடைய வாழ்வையும் தத்துவங்களையும் பிரதிபலித்துக் காட்டு