பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவும் வல்லரசுகளும் 55 கையிலேயே இருந்து வந்தது. ஜப்பானியச் சட்ட சபைக்கு டையெட் என்று பெயர். அது மேல் சபை, கீழ்ச் சபை என்று இரு பிரிவாக உள்ளது. மேல் சபையே பிரபுக்கள் சபை. அதன் அங்கீகாரம் இல்லாமல் எந்த மசோதாவும் சட்டமாக முடியாது. அதன் 190-அங்கத்தினரில் 135-பேர் சக்கரவர்த்தி யால் நியமிக்கப்படுவர். 65-பேரே பணக்காரர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். மந்திரிப் பதவி போன்ற முக்கியமான பதவிகளுக்குச் சக்கரவர்த்தியே தக்கவர் களைப் பொறுக்கி நியமித்துவிடுவார். ஜப்பானுக்குத் தனியாக ஓர் அரசியல் சட்டமும் இருக்கிறது. எனினும் முடிவாகப் பார்த்தால், சக்கரவர்த்தி பெயரளவில் இருந்த போதிலும், ஆட்சி பிரபுக்கள் கூட்டத்தினரின் கையிலேயே இருப்பது புலப்படும். இவர்கள் பெரிய தொழில் முதலாளிகளும், வர்த்தகர் களும், ஜமீன்தார்களும், ராணுவ அதிகாரிகளும் நிறைந்த ஒரு கூட்டத்தினர். பழைய ராணுவத் தலைவர்கள் 'ஸ்ாமுராய்' வகுப்பினர் என்ற பெயருடன் விளங்கி வந்தனர். பின்னல் சம்பளம் காணுதென்று வாதாடியதற்காக அவர்கள் அநேக மாய் நீக்கப்பட்டுப் போயினர். லட்சக்கணக்கான குடியானவர்களைப் பயிற்சிசெய்து புதிய படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நில-அடிமை முறை யால் குடியானவர்கள் கிலச்சுவான்களிடம் அடைக் கலமா யிருந்தது ஒழிக்கப் பட்டது. இதனுல் நகரங்களில் பல யந்திரத் தொழிற்சாலைகளுக்கும் தேவையான கூலி வேலைக்காரர்கள் ஏராளமாய்க் கிடைத்து வந்தார்கள். ஜமீன்தாரி முறையும் பெரும்பகுதி ஒழிக்கப்பட்டு, ஜமீன்தார்களுக்கு கஷ்ட ஈடாக லட்சக்கணக்கான பொருள் அரசாங்கத்தி லிருந்து கொடுக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்ன வெனில், முக்கியமான ஜமீன்தார்கள் தாமாகவே ஜமீன்களைக் கொடுத்ததுதான். அவர்கள் எல்லோரும்