பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லா சுகளும் 61 (ஜப்பான் சீனுவில் ஆதிக்கம் பெற்ற பிறகு I) சீனவில் தொழில்களை வளர்ப்பதற்கு ஜப்பானிய மூல தனம் மட்டும் போதாது என்றும், ஆங்கில மூல தனத்தையும் அனுப்பி லாபமடைய வழி பிறக்கும் என்றும் வெளிப்படையாகக் கூறி வந்தார். இந்த மந்திரி மேலும் சிறிது காலம் உயிரோடிருந்து ஜப்பா னுடைய பிந்திய திருவிளையாடல்களைப் பாராமல் அகியாயமாகப் போய்விட்டார் 1 மற்ருேர் ஆங்கில மந்திரியான ஏமெரி, ஜப்பானுடைய அக்கிரமங் களைக் கண்டிக்க ஆங்கிலேயருக்கு வாயில்லை என்றும், கண்டித்தால், இங்தியா பர்மா முதலான இடங்கள் சம்பந்தமாக ஆங்கிலேயருடைய பழைய சரித்தி ரத்தை ஜப்பான் அவிழ்த்துவிடும் என்றும் பயமுறுத் திர்ை. முந்திய நூற்ருண்டில் பிரிட்டன் செய்ததைத் தான் இந்த நூற்ருண்டில் ஜப்பான் செய்து வருவதாஅக அவர் கருதுகிருர் அமெரிக்காவும் ஏறத் தாழப் பிரிட்டிஷ் முறையையே அனுஷ்டித்தது. 1940-ஆம் வருஷக் கடைசியில்தான் அமெரிக்க வெளி நாட்டுக் கொள்கையில் மாறுதல் தோன்றி, ஜப்பானே எதிர்க்கும் உறுதி பிறந்தது. ஜப்பானே லட்சியடம் செய்யாமல் ஆரம்பம் முதல் சீனவுக்கு உதவி.ெ சய்து வந்த நாடு ஸோவியத் ரஷ்யா ஒன்றுதான். ஸோவியத் ரஷ்யா ஒன்றுதான், யுத்தம் தோன்ருமலிருக்க, ஜனநாயக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என்று பல வருஷங்களாக உலகறியக் கூவி வந்தது. அதன் கூற்றுக்குச் செவி சாய்ப்போர் இல்லை. ஏனெனில், யுத்தக் கொடுமை யைக் காட்டிலும், வல்லரசுகளுக்கு ஸோவியத் ரஷ்யா என்ற பெயர்தான் அதிகப் பயங்கரமா யிருந்தது. அதனலேயே அவைகள் ஐரோப்பாவில், அவமானகரமான மூனிக் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஹிட்லரைச் சமாதானப்படுத்த முயன்றன. அதன லேயே, கிழக்கே ஜப்பான் சீனவைப் படுகொலை