பக்கம்:சுமைதாங்கி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

சுற்றுலா

குற்ருல அருவிகள்போல் குவலயத்தில்

குளிப்பதற்கும் களிப்பதற்கும் வாய்ப்பா யுள்ள வற்ருத மலையருவி வேறெங் குண்டு?

வான்முட்டும் மலைத்தொடர்கள் பலஎன் ருலும் வெற்ருகப் பனிபடர்ந்து பயனில் லாமல்

வீணுக நிறைந்துளவே எங்கும்; இங்கோ உற்ருர்க்குப் பேரின்பம் நல்க வல்ல

உதகையுடன், கொடைக்கானல், ஏரிக் காடு

சுற்றுலாவை காடுவோரின் நோக்கம் போலச்

சுகமிகுந்த மலிவான மலைத்த லங்கள். பற்றுடைய வெளிநாட்டார் மட்டு மன்றிப்

பயண த்தில் விருப்புள்ள உள்நாட் டாரில் கற்றவர்கள், மேடான வாழ்வில் கிற்போர்

கருதுவதோ டன்றியிடைப் பட்டோர் கூட முற்றிலுமே துய்க்குமாறு எண்ணி றந்தோர்

மொய்க்கின்ருர்; நம்நாட்டின் பெருமை என்னே!

குறிஞ்சியுடன் மருதமுல்லை பாலை நெய்தல்

குறிப்பாக நிலப்பரப்பை ஐந்தாய் ஆக்கி கறுஞ்சிறப்பு மிக்கனவாய் ஐந்தி ணைகள்

நல்லொழுக்க அடிப்படையில் வாழ்வாய்க் கொண்டு பெறுஞ்சுகமே இயற்கையன்னை வகுத்த சொத்து; பெறற்கரிய நீள்கடலோ துன்ப வெம்மை உறிஞ்சிடவே உதவுவதால், உலகில் யாரும்

உணரவொண்ணு உயரின்பம் நமதே யாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/103&oldid=692180" இலிருந்து மீள்விக்கப்பட்டது