பக்கம்:சுமைதாங்கி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல்

இந்திய காட்டினில் வந்த விருந்தினர் சொந்தமாய் எண்ணி கிரந்தரமாய் விந்தையுடன் தங்கள் சிந்தை செலுத்தியே சொந்த கலத்தில் அழுந்தி விட்டார். கொந்து கிடந்து பிறந்த சகோதரர் வெந்துயர் மேலும் நிறைந்தவராய் வந்தவர் தந்து மிகுந்த கொடுமையைக் கொந்தி எறிந்திட முக்தி வந்தார்!

கஞ்சனையார்.அவர் வஞ்சகமாக நாம் தஞ்சம் அடைந்ததாய் எண்ணிவிட்டார். அஞ்சி அடங்கலும் கெஞ்சிக் குழைதலும் கொஞ்சமும் நம்மவர் பண்பிலேயே! துஞ்சுதல் விட்டுகாம் விஞ்சி எழுந்திடில் பஞ்சில் நெருப்பாய்ப் பறந்திடுவார். கஞ்சி இல்லாதவர் நெஞ்சினில் மாபெரும் வஞ்சினங் கூறி விரைந்தெழுந்தார்!

பண்ணுடன் தாளமும் பின்னி இணைந்திட மண்ணின் தன்மானம் நிலைபெறவே கண்ணிடுந் திங்குகள் எண்ணவொணுதென உண்மையுணர்ந்து நாம் தொண்டு செய்தோம். எண்ண இனித்திடும் அண்ணலாம் காந்தியின் வண்ண மிகுந்த சுதந்திரப்போர் திண்ணமாய் வெற்றியைக் கண்ணியமாகவே கண்முனர்க் கொண்டு கிறுத்தியதே!

சு.-7 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/106&oldid=692183" இலிருந்து மீள்விக்கப்பட்டது