பக்கம்:சுமைதாங்கி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரு வேப்பிலே

கருவாக விதையாகச் சினையு மாகக்

கருவூலப் பொருளாகப் பெயரெடுத்தேன். திருவாக வாழ்ந்தாலும் துருப்பி டித்தே

தேய்ந்தாலும் கான்மட்டும் ஒய்ந்தா போவேன்? கருவாழை யானஎனக் கெதிர்ப்புக் காட்டக் -

கடையடைப்போ ஊர்வலமோ ஏது மில்லை; திருவாளர் சிலர்கட்டுப் பாடென் கின்ருர்;

சிறக்கட்டும் கண்ணியம் என் கடமை என்ன?

அணுவென்றே உரைத்திட்டார் அறிஞர் என்னை;

அடக்கத்தில் எனக்குகிகர் நான்தான்! துாய பணிவுள்ள பருவப்பெண் காணத் தைப்போல்

பாதுகாப்புச் சட்டத்தின் கைதி யாகித் துணிவோடு விடுதலையும் பெறுவேன், ஒர்நாள்

சுமைதாங்கும் பூமிக்கோர் வரவும் ஆவேன். உணவாக ஐம்பூதம் எனைச்சு வைக்கும்;

உடலின்ஜம் புலன்களையும் கான்று கர்வேன்.

அனைத்துயிரின் இனத்தினையே பெருக்கிக் கூட்டும் ஆசிரியன் அடியேன்தான் ஆளுல் ஒன்று பனைத்து 2ணயாய்ப் பாவையிடம் எனப்பார்க் காமல்

பாழ்வெளியைப் பயன்படுத்தப் பசுமை கொஞ்சும் தினைத்துணையே விளைகின்ற விவசாயத்தில்

திறமான விஞ்ஞானப் புதுமை சேர்த்தால் கினைத்தபடிப் படிப்படியே உணவுற் பத்தி

நிறைவெய்தும்; அதுதானே என்பே ரின்பம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/12&oldid=692089" இலிருந்து மீள்விக்கப்பட்டது