பக்கம்:சுமைதாங்கி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பான்

கெப்பொலியன் அலெக்சாந்தர் சீசர் சர்ச்சில்

கெல்சன் மாவ் வாசிங்டன் லெனின்கம் காந்திஎப்பொழுதும் இவர்தம்மை ஒப்பார் மிக்கார்

இருந்துளரா உலகத்தின் அனைத்து காட்டில்? முப்பெரிய சேரசோழ பாண்டி வேந்தர்

முறைசெலுத்தி அரசோச்சும் அந்நாள் தொட்டுச் செப்பரிய வீர மறச் செயல்பு ரிந்து

திறலுணர்த்தி, மறையாமல் இவர்வாழ் கின்ருர்!

என்னஇவர் பெற்றிருந்தார் அரிதாய்ப் பண்பில்?

ஏற்றமுள்ள புகழ்வினைகள் எவற்றைச் செய்தார்? சின்னவரும் சொன்னவுடன் பெயர்தெ ரிந்து

சிலிர்க்கின்ருர் பெருமிதத்தால் உணர்வு பொங்க! :முன்னுமில்லை பின்னுமில்லை மொய்ம்பு கொண்டோர்

முக்காலும் உண்மை’ என எக்க ளிப்பார். அன்னவர்போல் கண்ணெதிரே ஒருவன் உள்ளான்; அறிவீனங் களைந்திங்கே வந்தால் காண்போம்!

கடல்நீரோ முழுநீலம், நெடுவான் ஊதா,

காரிருளே காற்புறமும்; இரவின் உச்சம்; சுடர்கிலவோ தோன்றவில்லை; விண்மீன் சொற்பம்;

சுழன்றடிக்கும் புயற்காற்றல் அலைகள் சீற்றம்: திடநெஞ்சும் கரைந்துருகும் சூழல்; சென்று

சேருமிடம் மிகத்தொலைவு; பயணக் கப்பல்; கடமையுள்ளம் படைத்திட்ட தலைவன்; ஆனல்

கலங்குகின்ருர் மீகாமர்; யாது சொல்வான்?

1 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/120&oldid=692197" இலிருந்து மீள்விக்கப்பட்டது