பக்கம்:சுமைதாங்கி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணபதியைக் கும்பிட்டு ഷ്டு செல்வர்

காலத்தின் சுழற்சியிலே, நாள டைவில், பணமதிகம் பார்ப்பதிலே நாட்ட முள்ளோர்,

பக்கத்தில் வருபவர்பால் பேசிக் கொண்டே, கனமுடைய சுமைதலையில் வைத்த வாறு, கடைவீதி ஓரத்தில் வெளியூர்க் காரர் மனமகிழ்வில் ஏமாறு வாரா என்று - மங்காத பார்வையினைச் சுழல விட்டுக்,

கரமிரண்டும் புகையிலையைக் கிள்ளிப் போடக்,

காற்செருப்பு தாமாகக் கழன்று கொள்ள, வரமருளும் யானைமுகன் கோவில் முன்னே

மனத்தினிலே வணங்குகின்ற எண்ண மின்றிட உரமுடனே சிறுபொழுது நின்று, மீண்டும்

உரத்தக்குரல் சத்தமிடச் செருப்பை மாட்டிப் பரபரப்பாய்ப் புறப்படுவார். இவர்கள் நெஞ்சில் பக்தியுண்டா? கடவுள்தான் நம்பு வாரா?

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/45&oldid=692122" இலிருந்து மீள்விக்கப்பட்டது