பக்கம்:சுமைதாங்கி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல்தான் அசல்வாசல் செய்தி போக

அச்சத்தைத் தவிர்ப்பதற்கும் அஃதே சொல்லாம்! கொஞ்சல்தான் ஊடலின்பின் வெற்றிப் பாதை;

கூடுவார்க்குக் கொஞ்சல்தான், கூச்சல் வேண்டாம்! துஞ்சல்,கள் அருந்துவார்க்கு மரணம் போலே;

துக்கிவைத்துக் காப்பாற்றிப் பயன்தான் என்ன? மிஞ்சல்வீண் நெரிசல்தான்? மிகையாய்ப் போனல்

விரிசல்தான்; அலேச்சல் ஏன்? வருமா புத்தி?

ஈசல்கள் இறக்கையுள்ள கறையான்; புற்றில்

இருந்திடாமல் பறந்துவந்தால் வீழ்ந்து மாயும்! ஏசல்கள் இதயமில்லா ஒதியங் கொம்பின்

ஏமாற்ற விளைச்சல்தான்; இடைஞ்சல் ஆகா! பூசல்கள் பொல்லாங்கு கல்கா வண்ணம்...

புகைச்சல்,கண் எரிச்சல்கள் வராது காப்போம்! ஊசல்சோ(று) உண்பதற்கே உதவா தம்மா,

ஊஞ்சல்போல் உள்ளமுந்தான் அஃதே யாகும்!

ஒய்ச்சல்கா ளுச்ேசல் மீனின் பண்பாம்;

உணராத எருமைகளை என்ன சொல்வோம்? பாய்ச்சல்தான் புலிக்குட்டி இயல்பு; பன்றி

பதுங்கியோடிச் சேற்றில்தான் மூழ்கும் புல்லில் மேய்ச்சல்தான் ஆட்டுக்குத் தொழிலாம்; யானே மேல்மட்டம் உயர்வதற்கு முடியா தன்ருே? காய்ச்சல்தான் பிதற்றலுக்குக் கார ணம்; ஆம்,

கடுஞ்சொல் ஏன்? பத்தியமாய்க் காத்தி ருப்போம்!

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/57&oldid=692134" இலிருந்து மீள்விக்கப்பட்டது