பக்கம்:சுமைதாங்கி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

எவ்வாருே பாப்புனேயும் திறனும் பெற்றன்:

இனிமையுடன் எழுதுகிற துடிப்பும் கொண்டான்! செவ்வாழைக் கனிச்சுவையை வெல்லும் செய்யுள் சிறப்போடு சுவடிகளை நிரப்பும்; நெஞ்சம் ஒவ்வாத கருத்துகளை உரைத்த லில்லை;

உழைப்பினிலும் பின்வாங்க மாட்டான், ஊரார் அவ்வாறு பாராட்டிப் புகழ்ந்து ரைத்தார்.

அளவின்றிப் பொருளிட்டிச் சேர்த்து வைத்தான்.

வலிவான அரசாட்சி அமையாக் காலம்,

வன்முறையில் கொள்ளையிடும் கூட்டத் தார்கள் மலிவாகப் பெருகிவந்தார்! ஊர்கள் தோறும்

மக்களெலாம் அஞ்சுமாறு சூழ்ந்து தாக்கி, நலிவான செல்வரிடம் பொருள்க வர்ந்து,

நாடுமுற்றும் கேடுசெய்யப் படையெடுத்தார்: பொலிவார்ந்த தமிழ்நாட்டில் களங்கந் தேடப்

புகுந்துவிட்ட இக்குழுவைத் தடுப்பா ரில்லை!

முத்தம்மாக் கிழவிக்கும் ஒருநாள் ஒலை

முடுகிவரத் திடுக்குற்று மகனி டத்தில் சத்தமின்றிச் செய்தியினை வெளியிட் டாளே ! சடசடென வீட்டிலுள்ள நகைபொ. ருட்கள் அத்தனையும் கில்த்தடியில் புதைத்து விட்டாள்!

அருமையாக மகன்யாத்த சுவடிக் கட்டைப் பத்திரமாய்ப் பரண்மீதில் ஒளித்து வைத்தாள்;

பக்குவமாய் வெறும்விட்டில் வாழ்ந்திருந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/59&oldid=692136" இலிருந்து மீள்விக்கப்பட்டது