பக்கம்:சுமைதாங்கி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

у

பெயரில் ஒரு செய்யுள் நூல் இதுவரை வெளியானதில்லை என் கவிதைகளில் அங்கதச் சுவையும், நகைச்சுவையும் மிகுந்து காணப் படுவதாகத் திறய்ைவாளர் கருதுகின்றனர். கதைபொதி கவிதைகளே எனக்கு மெத்த விருப்பமானவை. எவையாயினும், யாப்புக்குட்பட்ட மரபு வழிக் கவிதைகளே நான் எழுதுவன. என் கவிதைகளைச் சுவைத்து, என்னைப் பாராட்டி ஊக்கிவிட்ட பேரறிஞர் பெருந்தகையோர் சிலர் இன்றில்லை எனினும், இந்நாள் மேல்மட்டப் பெருமக்கள் பலரும் என் எழுத்துக்களை விரும்பிச் சுவைப்போரே ஆவர்.

தமிழ்நாட்டில் கவிதைகளை எழுதுவோரும், எழுதின லும் சுவைப்போரும் மிகவும் குறைவு. படித்தால் புரியாது என ஒதுங்கு வோரே அதிகம் பேர்! பத்திரிகைகள் எத்தனை வெளிவந்தாலும் கவிஞர்களுக்கு இடம் தருவதில்லை. கவிதை எழுதுவதற்கு உண்மை யான, முறையான இலக்கண அறிவு வேண்டும். புதுக் கவிதை என்று செய்யுள் சட்ட திட்டங்களை விட்டு விலகுவோர்க்குங்கூடத் தமிழ்ப் புலமை இன்றியமையாதது. எனவே கவிதை எழுத முயல் வோரும் குறைவே! அடிப்படைத் தமிழறிவு சிறிதும் இல்லா தோரும் தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளராக விளங்க முடியும்! ஆங்கிலம் மிகுந்த உரையாடல் நடையிலேயே இன்று யாவும் எழுதப்படுகின்றன; அவையே பாராட்டும் பெறுகின்றன. என்ன செய்வது?

இப்படியாகவும் தமிழ் மொழி வளர்ந்து வந்து கொண்டிருந்த சூழ்நிலையில், ஒரு தமிழ் வார இதழுக்குத் திடீர்த் துணிச்சல் ஒன்று ஏற்பட்டது. 'தினமணிகதிர்' என் கவிதைகளை மெத்தவும் விரும்பித், தொடர்ந்து வெளியிட விழைந்தது. அந்த இதழுக் காகவே, தமிழ்மொழியின் எழுத்துச் செழிப்பையும், சொல்வளத் தையும், பொருள் மேம்பாட்டையும் எடுத்துக் காட்டிடும் வண்ணம் ஒரெழுத்தும் ஈரெழுத்தும் பயின்றுவர, எளிமையான கவிதைகள் சில எழுதத் தொடங்கினேன். இவற்ருல் எனக்கு ஏற்கனவே இருந் தவர்கள் தவிரப் புதிய வாசகர்களும் உருவாயினர். இதற்காகத் தினமணிகதிருக்கு நான் நன்றி செலுத்துங் கடப்பாடுடையேன்.

எனவேதான், இன்று நூல் வெளியிட வேண்டிய கட்டா யத்துக்கு நான் ஆளானதும், கதிரில் வெளியான கவிதைகளிற் பல வற்றையும் திரட்டித் தொகுத்து உங்கள்முன் படைக்கும் துணிவு பெற்றேன். மேலும் இந்தத் தொகுப்பில் மூன்று இசைப் பாடல் களும், சில கதைப் பாடல்களும், பெருமக்கள் பற்றிய கவிதை களும், பல்வேறு இதழ்களில் வெளியானவை இடம் பெற்றுள்ளன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/6&oldid=692083" இலிருந்து மீள்விக்கப்பட்டது