பக்கம்:சுமைதாங்கி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா

'தா' என்ருல் தருவீரா, இந்தா' என்று?

சமநிலையில் உள்ளவர்பால் கேட்கும் சொல்; தா! தாவென்ருல் குரங்குபோல மரத்தில் தாண்டல்;

தாவலிலே ஆவலுள்ள மனிதன் உண்டு தாயென்ருல் மாதாதான்; பிதாவோ தந்தை; தாத்தாவும் ஆத்தாவும் மூத்தார் ஆவர்! 'தா' என்ருல் தாம்பூல வாய், தா; அத்தான்

தாலிகட்டித் தாரம் ஆணுய்; தாகம் கொள்வாய் !

தாதுபார்த்து காடிகளின் துடிப்பை நோக்கித்

"தாறுமாருய்த் தாமதமாய் என்பால் வந்தாய்! தாதிபார்த்துத் தருகின்ற மருந்த ருந்தித்

தாயாதிக் காய்ச்சலெலாம் தாங்கிக் கொள்வாய். தாதாளன் றுனையெண்ணித் தாரை வார்த்தாய்;

தாராளம் எதுவரையில் தாங்கும்? யார்க்கும் தாதனென வாழாதே, கிமிர்வாய்' என்று

தாமுரைத்தார் மருத்துவராம் எனது நண்பர்!

தாக்கணங்கு வாராத சங்க் நூலின்

தாளில்லை; இந்நாளில் எவர்தாம் பார்த்தார்? தாக்குவதோ தாவணியில் லாத ஆடை,

தாட்சணியம் பெண்கள்பால் இல்லை என்ற தாக்கலொன்றும் இதுவரையில் கேட்ட தில்லை; தாங்குவரோ இல்லத்தார் தாண்ட வத்தை! தாக்குதல்கள் போர்முனையில் தானேக் குள்ளே!

தாழியின்மேல் குந்தாணி தாயத் தாகும்.

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/62&oldid=692139" இலிருந்து மீள்விக்கப்பட்டது