பக்கம்:சுமைதாங்கி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாரு

"உங்களம்மா நீண்டகாளாய் அழைக்கின் ருரே;

ஊர்க்குப்போய் வருவோமா? மனைவி கேட்டாள் தங்குதடை சொல்வேனு மாமி யாரைத்

தான்விரும்பிப் பார்ப்பதொரு வியப்புத் தானே? திங்களன்று விடியுமுன்னர் இறக்கி விட்டுச்

சென்றுவிட்ட தொடர்வண்டிப் புகையைத் தாண்டி எங்களுரின் மண்சாலை வழியே சென்ருேம்;

இரண்டரைக்கல் தொலைவுக்கும் கால்க டைதான்!

இருள்முற்றும் விலகாத இனிய நேரம்

இளவேனிற் காலத்தின் எழில்ம யக்கும் பொருள்முற்றும் புரிந்ததல்ை உணர்ந்து பாடும்

புதுமைநிறை திருவருட்பா இசைத்த வாறேநிறைவோடு அருள்பெற்ற கடந்து சென்ருேம்.

ஆறெல்லாம் வறண்டிருந்தும் ஊற்று நீரைச் சுருள்சுருளாய்த் தோண்டிமொள்ளும் குழிகள் கண்டு

தொண்டாற்றும் இயற்கைத்தாய்அன்புணர்ந்தோம்

கடந்திருப்போம் பாதிவழி, எதிரில் யாரோ

கடும்.விரைவாய்த் தடுமாறி வருதல் கண்டோம்!

நடந்திடவும் இயலாத ஒருமூ தாட்டி

நரைதிரையைக் கருதாமல் ஓடி வந்தாள்!

இ க்தந்து சிறிதொதுங்கி நின்ற எம்முன்

இரைச்சலுடன் பெருமூச்சு விட்ட வாறே

உடைந்துபோன உள்ளத்தை எதிரொ லிக்கும்

ஓசையுடன் குழறுகின்ருள் கண்ணிர் சோர:

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/82&oldid=692159" இலிருந்து மீள்விக்கப்பட்டது